TamilSaaga

நியாயமான காரணங்களுக்காக.. 6 மாதத்துக்குள் “Migrant domestic Worker”-ஐ வேலையை விட்டு நிறுத்தினால்.. 50% கட்டணம் “Cashback” – MOM உத்தரவு

தரமான சட்டங்களையும், உத்தரவுகளையும் இயற்றுவதில் நமது சிங்கப்பூர் எப்போதும் உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக தான் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்களின் நலனில், பாதுகாப்பில் எப்போதும் தனி அக்கறை செலுத்தி சிங்கப்பூர் அரசு அவர்களை அரவணைத்து வருகிறது.

அதேசமயம், தனது உள்ளூர் மக்களையும் சிங்கை அரவணைக்க தவறியதில்லை. அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டாக வெளிவந்திருக்கிறது இந்திய புதிய உத்தரவு.

நமது சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் முதல், வேலைக்கு பணியமர்த்தப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணை அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்குள் நிறுத்தினால், employment agencies-கள், அந்த பெண்ணை வேலைக்கு தேர்வு செய்த முதலாளிகளுக்கு, அவர் அளித்த சேவைக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தைத் திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இளம் வயதிலேயே கற்பழிப்பு.. கட்டுப்படுத்த முடியா “கோபம்”.. சிங்கப்பூரில் முதலாளியை கழிவறையில் வைத்து “94 முறை” குத்தி கொலை செய்த இளம் பெண்!

பணத்தைத் திரும்பப்பெறும் இந்த புதிய கொள்கையானது ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு செலுத்தப்படும் அனைத்து சேவைக் கட்டணங்களின் போது மட்டுமே பொருந்தும் என்று MOM தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில சூழ்நிலைகளில் வேலைவாய்ப்பு முகவர் பணத்தைத் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது பணிப்பெண்ணுக்கு எதிராக முதலாளி வேண்டுமென்றே தவறான நடத்தைகளில் ஈடுபடுவது போன்ற தருணங்களில் அவர்கள் பணத்தை திரும்பப் பெற முடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts