SINGAPORE: வரும் ஏப்ரல் மாதம் முதல், dormitories-களில் வசிக்கும் அல்லது கட்டுமானம், கடல் கப்பல் கட்டும் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட முதன்மை பராமரிப்புத் திட்டங்களை (PCP – primary care plans) வாங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி, அத்தகைய தொழிலாளர்கள் work permits மற்றும் S பாஸ்களைப் பெற அல்லது புதுப்பிக்க வேண்டிய தேவைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (பிப் 19) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட PCP இன் விலை, ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு $108 முதல் $138 வரை உள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுகாதார பொறுப்பாளரிடம் வழக்கமான மாதாந்திர தவணைகளில் இந்த தொகையை செலுத்தலாம்.
இதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களின் முதன்மை பராமரிப்புத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் பணி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள், வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் மற்றும் டெலிமெடிசின் ஆகியவை அடங்கும்.
தங்குமிடங்கள் மற்றும் communal living spaces-களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களில், மூன்றில் ஒரு பங்கு அல்லது 300,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் இடம் பெறுவார்கள். அதாவது பயனடைவார்கள். கோவிட்-19 தாக்கம் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் இது.
நேற்று (பிப்.19) செயின்ட் ஆண்ட்ரூவின் வெளிநாட்டு தொழிலாளர் மருத்துவ மையத்தின் தொடக்க விழாவில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முதன்மை சிகிச்சையை அணுகும்போது PCP அதிக மன அமைதியை வழங்கும் என்றார்.
“இந்த திட்டமானது நிறுவனங்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்ற புரிதலையும், வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்பாராத உடல்நலப் பாதுகாப்பு சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளையும் நிர்வகிக்க உதவும்” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் outpatient care-ஐ வழங்கும் ஆறு பிராந்திய மருத்துவ மையங்களில் செயின்ட் ஆண்ட்ரூவின் புலம்பெயர்ந்த தொழிலாளர் மருத்துவ மையம் முதன்மையானது.
தகுதியுடைய, புதிதாக வந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் நிறுவனங்கள், அவர்களது work passes வழங்கப்படுவதற்கு முன் PCPஐ வாங்க வேண்டும். தங்கள் work passes-ஐ புதுப்பிக்கும் அல்லது வேறு நிறுவனத்தில் வேலைக்கு மாறும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வரும் தற்போதைய வெளிநாட்டு தொழிலாளர்கள் மார்ச் 31, 2023க்குள் செல்லுபடியாகும் PCP-ஐ பெற்றிருக்க வேண்டும், அந்தத் தேதிக்குப் பிறகு அவர்களது work passes புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தாலும் கூட PCP பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த மருத்துவ மையத்திற்கு ஒவ்வொரு முறை வரும் போதும் செலுத்த வேண்டிய கட்டணம் $5 ஆகும். ஒவ்வொரு டெலிமெடிசின் அமர்வுக்கும் $2ஐயும் இணை கட்டணமாக வழங்க வேண்டும் என்று MOM கூறியுள்ளது.
உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையை உள்ளடக்கிய ஒவ்வொரு work permit வைத்திருப்பவருக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் நிறுவனங்களின் சட்டப்பூர்வப் பொறுப்பை PCP பூர்த்தி செய்கிறது.
ஒரு புதிய அமைப்பின் கீழ், இந்த ஆரம்ப சுகாதார சேவை சிங்கப்பூரின் ஆறு வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படும். அங்கு குறைந்தது 40,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் dormitories-களுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்றனர்.
Penjuru பொழுதுபோக்கு மையத்தில் உள்ள St Andrew’s வெளிநாட்டு தொழிலாளர் மருத்துவ மையம் ஏற்கனவே இயங்கி வருகிறது, சோவா சூ காங், ஜூரோங் வெஸ்ட் மற்றும் பாசிர் பாஞ்சாங் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் 57,000 தொழிலாளர்களுக்கு இது சேவை செய்து வருகிறது.
மற்ற ஐந்து மையங்களும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் நிரந்தர அல்லது தற்காலிக இடங்களில் செயல்படத் தொடங்கும்.