சர்வதேச விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தனது உலகளாவிய ஆட்சேர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற செப்டம்பர் 2 மற்றும் 3, 2025 ஆகிய இரு தேதிகளில் சிங்கப்பூருக்கு வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பை பெரும் நபர்கள் துபாயில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸில் உள்ள பணி சூழல், அதில் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற, விண்ணப்பதாரர்கள் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் இந்த Roadshow மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த விமான நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் சுமார் 350 பதவிகளில் 17,300 நிபுணர்களை பணியமர்த்துவதற்கான எமிரேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஆட்சேர்ப்பு இயக்கத்தின் ஒரு திட்டமாக உள்ளது இந்த RoadShow. ஒரு விமான தொழில்நுட்ப வல்லுநரின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளில் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற விளக்கங்கள் கொடுக்கப்படும்.
இந்த Roadshowவில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வணிக விமானப் பராமரிப்பில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி அல்லது அதற்கு சமமான ஏதேனும் ஒரு பட்டம், மற்றும் இந்தப் பணிக்கு தேவையான குறைந்தபட்ச 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரும் ரோட்ஷோவில் கலந்து கொள்ளலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவுக்குப் பிறகு, ரோட்ஷோ நடைபெறும் இடம் குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தப் பதவிக்கு “Competitve Tax Free Salary” மற்றும் இலாபப் பங்கு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, கல்விக் கொடுப்பனவு மற்றும் பல சலுகைகல் வழங்கப்படும். அதுமட்டுமல்ல, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான தள்ளுபடிகளும் அதில் அடங்கும்.
மேலும் தேர்வாகும் ஊழியர்களுக்கு எமிரேட்ஸ் பிளாட்டினம் அட்டையும் கிடைக்கிறது, இது உள்ளூர் மற்றும் உலகளவில் ஏராளமான பிராண்ட் மற்றும் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், கிளினிக்குகளில் பல்வேறு பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.