சிங்கப்பூரில் மின்சாரத்துக்காகவே வருவாயில் பெரும்பகுதி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தின் காரணமாக வீட்டில் இருந்தே பணி புரிதல் மற்றும் வீட்டிலேயே கல்வி கற்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த சூழலில் மின்சார கட்டண உயர்வும் ஒருபுறம் உள்ளது. இதனால் மின்கட்டணத்துக்கு அதிக பணம் செலவு செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
உதாரணமாக செனோகோ எனர்ஜி வழங்கிவந்த நிலையான மின்சார கட்டணம் இந்த மாதம் காலாவதி ஆவதனால் முன்பு மணிக்கு ஒரு கிலோவாட் 15.89 காசாக இருந்த கட்டணம் தற்போதைய புதுப்பிப்பில் 24.9 காசாக அதிகரித்துள்ளது.
அதே போல் எரிபொருள்களின் விலை அதிகரிப்பின் காரணமாக திறந்த மின்சார சந்தை நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. மேலும் லாபம் பெற முடியாத பல நிறுவனங்கள் திறந்த மின்சார சந்தையை விட்டு விலகின. மிகப்பெரிய நிறுவனமான “ஐசுவிட்ச்” நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதே போல் சிங்கப்பூரின் “ஓம் எனர்ஜி” நிறுவனமும் தன்னுடைய மின் விநியோக சேவையை நிறுத்தப்போவதாக வாடிக்கையாளர்களுல்கு தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில் மின்கட்டணத்துக்காக வருவாயில் அதிகளவு செலவு செய்ய வேண்டியதான நிலை உள்ளது.