TamilSaaga

போதைப்பொருள் கலக்கப்பட்ட ரொட்டிகள் – சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது

சிங்கப்பூரில் CNB என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு ஆணையம் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 சிங்கப்பூரர்களும் ஒரு வெளிநாட்டவரும் கைசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த நால்வரில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஜூன் 22ஆம் தேதி சிக்லேப் வாக் பகுதியின் அருகில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர்.

அப்போது அங்கு இருந்தவர்களிடம் இருந்து சுமார் 3000 கிராம் கஞ்சா, 14 கிராம் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருள். 9 கிராம் கொக்கைன் 79 எக்ஸ்டஸி மாத்திரைகள். மேலும் கஞ்சா கலக்கப்பட்டதாக நம்பபப்படும் ரொட்டி வகைகள் கண்டறியப்பட்டன.

உணவு பொருட்களில் போதைப்பொருட்கள் கலந்திருந்த நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து சுமார் 4,100 வெள்ளி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 50,000 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கைதான நால்வரிடமும் தொடர்ந்து தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts