TamilSaaga

சிங்கப்பூரில் சிக்கிய கஞ்சா விற்பனையாளர்.. 2.4 கிலோ பறிமுதல் – 9 ஆண்டு ஜெயில்

சிங்கப்பூரில் கஞ்சா அல்லது “மரிஜுவானா” புகைபிடித்த வணிக Diver, தனது வேலையின் காரணமாக ஏற்பட்ட முதுகுவலியைப் போக்குவதற்காக சுமார் 2.4 கிலோ போதைப்பொருள் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் குற்றங்களுக்காக நேற்று திங்கள்கிழமை (அக் 25) ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

31 வயதான முஹம்மது ஹைகல் முகமடன் போதைப்பொருள் உட்கொண்டமை, A வகுப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் பாத்திரங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். நான்காவதாக ஒரு குற்றச்சாட்டும் தீர்ப்பில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் விநியோகம் செய்ய “ஆ பேங்” என்று மட்டுமே அறியப்பட்ட ஒருவருக்கு உதவிய முகமது ஷாருக் கான் என்பவர் முகமது ரோஸ்லியுடன் பழகியதாக நீதிமன்றம் அறிந்தது. ஷாருக் தனது சொந்த வாடிக்கையாளர்களுக்கு, கஞ்சாவை S $ 200 பணத்துக்கு சுமார் 50g அளவுக்கு விற்றார் என ஒப்புக்கொண்டார்.

ஹைகால் என்பவர் முன்பு ஷாருக்கின் முன்னோடியிடம் இருந்து கஞ்சா வாங்கினார், ஆனால் ஜனவரி 2019 முதல் அதை ஷாருக்கிடம் இருந்து வாங்கிவந்தார். ஹைகால் ஷாருக்கை 2019 ஜனவரியில் பாசிர் ரிஸில் எனுமிடத்தில் முதன்முதலில் சந்தித்தார். அங்கு அவரிடமிருந்து S$100 மதிப்புள்ள கஞ்சாவை வாங்கினார்.

ஹைகால் வீட்டிற்கு அருகே அவர்கள் இரண்டாவது முறையாக சந்தித்தனர், மேலும் ஷாருக் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் காரில் அதிக போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல விரும்பாததால், சுமார் 350 கிராம் கஞ்சாவை ஹைகாலிடம் பாதுகாப்பிற்காக டெபாசிட் செய்து வைத்திருந்தார்.

மார்ச் 15, 2019 அன்று, மத்திய போதைப்பொருள் பணியகம் (சிஎன்பி) அதிகாரிகள் உளவுத்துறை செயல்பட்டு ஷாருக்கை பிளாக் 854 ஏ, ஜுரோங் வெஸ்ட் செயின்ட் 81 இல் உள்ள கார் பார்க்கிங்கில் கைது செய்தனர்.

ஷாருக், அன்றைய தினம் ஹைகாலில் இருந்து கஞ்சா அரைக்கும் உபகரணங்களை சேகரிப்பதற்காக ஹைகாலைச் சந்தித்தார், மேலும் தனக்காக ஐந்து தொகுதிகள் கஞ்சாவைப் பத்திரமாக வைக்குமாறு ஹைக்கலைக் கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் அவர் உளவுத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.

தற்போது இந்த வழக்கில் தீர்பு வெளியாகி அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts