TamilSaaga

சிங்கப்பூர்-ல் வாகனம் ஓட்டணுமா? இந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க!

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும் நகரங்களுள் ஒன்று. தினம் தினம் ஏராளமான சுற்றுலா பயணிகளாகட்டும், வேலைக்கு வருபவர்களாகட்டும் இந்த நகரத்திற்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

போக்குவரத்து பொறுத்தவரை அனைத்தும் இங்கு சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பெருமபான்மையான மக்கள் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த விரும்புகின்றார். அதற்க்கு ஒரே காரணம் இங்கு கார்களின் விலை அதிகம். அதை விட அதற்க்கு விதிக்கப்படும் வரிகள் மேலும் பல செலவுகள் என அனைத்தும் அதிகம். அதனாலேயே பொது போக்குவரத்துகள் தான் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் சில நேரங்களில் கார்களில் தனியாக பயணம் செய்ய மக்கள் விரும்புகின்றனர். அதற்காக இங்கு பல வாடகைக் கார் நிறுவங்களும் உள்ளன. இங்கு கார்களை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும் நீங்கள் எடுக்கும் கார் அதன் மாடல் பொருத்து வாடகைப் பணம் மாறுபடும்.

எனவே நீங்கள் சிங்கப்பூரில் வாகனம் ஓட்ட விரும்பினால், அதற்கு வழி உண்டு. அதற்கான விதிமுறைகளும் உண்டு.

அனைத்து நாடுகளைப் போலவும் சிங்கப்பூரில் நீங்கள் வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் கட்டாயம்.

நீங்கள் வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில், இங்கு குறுகிய காலம் மட்டுமே தங்குபவராக இருந்தால் IDP எனப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

நீண்ட நாள் தங்குபவராக அல்லது வேலை நிமித்தமாக இங்கு வாழ்பவராக இருப்பின், உங்கள் பன்னாட்டு உரிமத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் நாட்டின் அதிகாரபூர்வ ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். IDP ஒரு வருட காலம் வரை மட்டுமே சிங்கப்பூரில் செல்லுபடியாகும். அதன்பின் சிங்கப்பூரின் ஓட்டுநர் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். இந்த உரிமத்தின் மொத்த காலக்கெடு 3 வருடங்கள்.

இதற்க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், சொந்த நாட்டின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்தி IDP-க்கு விண்ணப்பிக்கலாம். https://internationaldriversassociation.com/checkouts/ta/driver-details/
மேலும் இங்கு புதியதாக வாகனம் ஓட்டுபவர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை விதிகள் உள்ளன. அதனைப் பின்பற்றினால் அபராதம், தண்டனை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

• சிங்கப்பூர் பொருத்த வரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் 70 வயதைக் கடந்தவர்களுக்கும் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை.
• வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
• ரத்தத்தில் 0.08% ஆல்கஹால் இருந்தால் அது Drunken Drive-ல் சேர்க்கப்படும். எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
• அனைத்து விதமான வளைவுகளுக்கும் போக்குவரத்து சிக்னலைப் பயன்படுத்த வேண்டும்.
• வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
• எரிவாயுக் குழாய்கள், நீர்குழாய்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மஞ்சள் கோடிட்ட பகுதிகள் போன்ற இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை.
• சிங்கப்பூரின் பொதுவான சாலைகளின் வேக வரம்பு, மணிக்கு 50 கி.மீ ஆகும். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குறுகிய சாலைகளில் வேக வரம்பு மாறுபடும்.
• சீட் பெல்ட் அணிவது கட்டாயம். சில மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் இதற்க்கு விலக்கு அளிக்கப்படும்.
• இங்கு வலது பக்க டிரைவிங் கடைபிடிக்கப்படுத்தால், சந்திப்புகளில் வலதுபக்கம் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிடுவது கட்டாயம்.
• சாலைக் குறியீடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். அது தவிர தமிழ், மலாய் மற்றும் சீன மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
• வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் மேற்கண்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒரு வருடத்திற்குள் 13 Demerit புள்ளிகளைப் பெற்றிருந்தால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
• சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினர் சர்வதேச அல்லது சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை சோதனைச் சாவடிகளில் காண்பிக்க வேண்டியது அவசியம்.
• இது போன்ற சோதனைச்சாவடிகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் எனவே ஓட்டுனர்கள் அனைத்து ஆவங்களையும் எப்பொழுதும் வைத்திருப்பது கட்டாயம்.
• ஒருவேளை ஏதேனும் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதன் தீவிரத்தின் அடிப்படையில் உதவிகளைப் பெறுவது கட்டாயம். காயங்கள் ஏற்படின் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். காலர்களின் உதவியை நாட வேண்டும். விபத்து நடந்த எதிர்தரப்பினருடன் தகவல்களைத் தெரிவித்து ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். வாடகைக் கார் நிறுவங்களுக்கு பகிர இது உதவியாக இருக்கும்.
• பதட்டப்படாமல் விபத்து நடந்த இடத்தில் பொறுமையுடன் இருந்து அதனை கையாள்வது அவசியம். விபத்து நடந்த பின் உடனே அங்கிருந்து நிற்காமல் செல்வது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வாடகைக்கு கார் எடுக்கும்பொழுது காப்பீடு உள்ள நிறுவனங்களில் எடுப்பது மிக முக்கியம். காரைப் பெறும்பொழுது காப்பீடு சரியாக உள்ளதை உறுதி செய்துகொள்வது மிக முக்கியம்.

மேற்கண்ட விதிகளைப் பின்பற்றி செயல்படும்பொழுது உங்கள் பயணம் சுமூகமாக இருக்கும்! நன்றி!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts