TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.
TOTO மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் Singapore Pools அமைப்பை நடத்தி வரும் சிங்கப்பூர் டோட்டலைசர் போர்டுக்கு செல்கிறது. இந்த தொகை முழுவதும் தொண்டு பணிகள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
TOTO வரலாறு :
1960களில் சிங்கப்பூரில் பெருமளவிற்கு பரவி இருந்த சட்ட விரோத சூதாட்டங்களை கட்டுப்படுத்தவதற்காக 1968 ம் ஆண்டு TOTO ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1981 ல் இது கணினி மயத்திற்கு மாற்றப்பட்டது. பல விதமான ஆன்லைன் விளையாட்டுக்களை இது அறிமுகம் செய்தது. தற்போதுள்ள TOTO ஆன்லைன் முறை 2016ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது.
அதிகரித்த பரிசுத்தொகை: சிங்கப்பூரில் நடந்த புத்தாண்டு டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுத்தொகை 8.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி பெறுபவர் கோடீஸ்வரராக மாறுவார் என்பது உறுதி! முந்தைய இரு குலுக்கல்களில் யாரும் முதல் பரிசை வெல்லாததால், பரிசுத்தொகை தொடர்ந்து அதிகரித்து, இறுதியாக 8.2 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
சிங்கப்பூரின் புத்தாண்டு டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கில் மூவர் இணைந்து 11.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை வென்றுள்ளனர்! இதன் பொருள், ஒவ்வொருவரும் சுமார் 3.9 மில்லியன் டாலர்களை வென்றுள்ளனர். இது நிச்சயமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு வெற்றி!
TOTO லாட்டரி… எப்படி பங்கேற்பது? ஈஸியாக டாலர்களை சம்பாதிக்க வழி இருக்கா?
நேற்று நடந்த அதிர்ஷ்டக் குலுக்கில் யாரும் முதல் பரிசை வெல்லாததால், பரிசுத்தொகை 11.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய குலுக்கலில் இருந்த 8.2 மில்லியன் டாலர்களை விட அதிகம்.
அடுத்தடுத்த குலுக்கல்களில் பரிசுத்தொகை இன்னும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. பெரிய பரிசுத்தொகை காரணமாக, அடுத்த குலுக்கலில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அடுத்த அதிர்ஷ்டக் குலுக்கல் நாளை மறுநாள் (ஜனவரி 6) நடத்தப்பட உள்ளது. அடுத்த குலுக்கலுக்கான பரிசுத்தொகை சுமார் 1 மில்லியன் டாலராக மீண்டும் புதிதாக தொடங்கப்படும்.
வெற்றி பெற்றவர்கள் பணம் பெறும் முறை :
5000 டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை வென்றவர்களுக்கு மட்டும் ரொக்கமாகவும், காசோலையாகவும் பரிசுத்தொகை வழங்கப்படும். பணத்தை நேரடியாக உங்களின் வங்கி கணக்கிற்கு பெறுவதற்கு Singapore pools கணக்கிற்கு நீங்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதோடு உங்களின் குடியுரிமை அல்லது FIN ஆகியவற்றிற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும். Singapore pools கிளையிலும் ஆவணங்களை காட்டி விண்ணப்பத்தை அளிக்கலாம். நீங்கள் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நீங்கள் விண்ணப்பித்தால் மட்டுமே உங்களுக்கு பரிசுத் தொகை கிடைக்கும்.