TamilSaaga

சமூகநல இல்லங்கள் – அத்யாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய முனீஸ்வரன் ஆலய சமூகப்பிரிவு

சிங்கப்பூரில் முனீஸ்வரன் ஆலயத்தின் சமூக சேவைப் பிரிவின் கீழ் சுமார் 12,500 வெள்ளி மதிப்புள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மூன்று சமூக நல இல்லங்களுக்கு அந்த அமைப்பு வழங்கவுள்ளது. இந்த நிகழ்வு குறித்து பிரபல செய்திமீடியாகார்ப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

The Art of giving என்ற முயற்சியின் மூலம் இந்த சேவையினால் சுமார் 225 சிறுவர்களும் மற்றும் பெண்களும் பயனடையவுள்ளார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முகநூல் வழியாக இந்த நன்கொடைகள் பெறப்பட்டதாக முனீஸ்வரன் ஆலயத்தின் சமூக சேவைப் பிரிவு கூறியுள்ளது.

மேலும் இந்த நன்கொடைகள் அனைத்தும் Chen Su Lan Methodist) சிறுவர் இல்லம், மற்றும் சிறுவர் சங்கத்தின் கீழே செயல்பட்டுக்கொண்டிருக்கும் Sunbeam Place பெண்கள், சிறுமிகளுக்கான பெர்டாபிஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு கொடுக்கப்பட்டன.

கொடுக்கப்பட்ட பொருட்டாகள் அனைத்து முன்கூட்டியே அந்த இல்லங்களில் என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று கேட்டறிந்து கொடுக்கப்பட்டது முனீஸ்வரன் ஆலயத்தின் சமூக சேவைப் பிரிவு தெரிவித்தது.
விநியோகிக்கப்பட்ட பொருட்களில் சுமார் 734 கிலோ கிராம் பழுப்பு அரிசியும் அடங்கும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் மனமுவந்து தாராளமாக நன்கொடை வழங்கியதாக
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் முனீஸ்வரன் ஆலயத்தின் சமூகச் சேவை பிரிவு செயல்படத் தொடங்கியது.

கடந்த வருடம், நோய்ப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டத்தின் முதல் கட்டத்தின்போது, அயராது உழைக்கும் முன்னிலை ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு இரவு சிற்றுண்டியை அது விநியோகித்தது.

Related posts