TamilSaaga

சிங்கப்பூரில் பெண்களுக்கு என்ன பாஸ் Apply பண்ணனும்… ஏஜென்ட் கட்டணமாக எவ்வளவு கேட்பார்கள்… இத follow பண்ணா ஈசியா வேல கிடைக்கும்

வேலைக்காக சிங்கப்பூர் வரும் பட்டியலில் பெண்களும் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதில் படித்தவர்களுக்கு நல்ல கம்பெனிகளில் வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் படிக்காத பெண்களுக்கு சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு தான் செல்ல முடியும்.

இப்படி வீட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் நீங்க இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். முதலில் சிங்கப்பூரில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இருக்கும். அதனால் தைரியமாகவே நீங்கள் இங்கு வேலைக்கு வரலாம். இங்கு அதிகம் தமிழ் பேசும் மக்கள் இருப்பதால் மொழி பிரச்னை ஏற்படுமாக என்பது குறித்து உங்களுக்கு பயமே வேண்டாம். தமிழ் குடும்பத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே ஏஜென்ட்டிடம் கூறி விடுங்கள்.

இந்த வேலைக்கு முதலில் உங்களுக்கு தெரிந்த ஏஜென்ட்டினை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களிடம் உங்க பாஸ்போர்ட்டினை கொடுத்து வீட்டுபணிக்கு வேலை தேட கூறுங்கள். அவர்கள் வேலை தேடி சிங்கப்பூர் ஏஜென்ட்டினை தொடர்பு கொள்வார். உங்க விபரம் மேட்ச் ஆகும் குடும்பத்தில் இருந்து யாரும் நேர்காணலுக்காக உங்களை அழைப்பார்கள். இது பெரிதாக உங்க சொந்த அறிமுகங்களே அதிகமாக இருக்கும். உங்களை அவர்களுக்கு பிடித்து போகும் பட்சத்தில் உங்களை வேலைக்காக ஓகே செய்வார்கள். இதை தொடர்ந்து உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக Domestic Migrant Worker பாஸ் அப்ளே செய்வார்கள்.

எல்லா பாஸ்களிலுமே பல லட்சம் கட்ட வேண்டும். ஆனால் இந்த பாஸ்களுக்கு உங்களிடம் இருந்து எந்த தொகையும் கேட்கப்படாது. சிங்கப்பூருக்கு வரும் டிக்கெட்டினை கூட நீங்கள் வேலைக்கு சேரும் குடும்பமே போட்டு உங்களை அழைத்து வருவார்கள். இருந்தும் ஏஜென்ட்டின் கட்டணமாக உங்களின் இரண்டு மாத சம்பளத்தினை பிடித்தம் செய்வார்கள். வீட்டு வேலை செய்யுமிடத்திலே உங்களுக்கு தங்குமிடம் கொடுத்து விடுவார்கள்.

வேலைக்காக வருபவர்களுக்கு $5000 சிங்கப்பூர் டாலர் மதிப்பில் செக்குரிட்டி பாண்ட் போட வேண்டும். அது மட்டுமல்லாமல் $15000 சிங்கப்பூர் டாலர் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட வேண்டும்.

உங்களுக்கு வயது 23ல் இருந்து 50க்குள் இருக்க வேண்டும். சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் சிலருக்கு 50 வயது தாண்டி இருந்தால் நீங்கள் Domestic Migrant Worker விசாவை 60 வயது வரை புதுப்பித்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்யும் PCM Permit தொழிலாளரா நீங்க… 3 நாளில் சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து மாறலாம்… இந்த green signal மட்டும் கிடைத்தால் போது வாழ்க்கை செட்டில் ஆகிடும்

உங்களுக்கு அடிப்படை கல்வி தகுதியாக 8ம் வகுப்போ அல்லது 10ம் வகுப்போ படித்திருந்தாலே போதுமானது. விசா ஏஜென்ட் அப்ளே செய்யாமல் வேலை செல்லும் ஓனர் கூட அப்ளே செய்யலாம். அதற்கு முதலில் $35 சிங்கப்பூர் டாலர் செலவாகும். ஆனால் பெரும்பாலும் வேலைக்கான ஆட்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதால் ஏஜென்ட் மூலமாக தான் இந்த நடைமுறை பெரும்பாலும் இருக்கும்.

வேலை செய்ய சிங்கப்பூர் வந்ததும் Settling-in புரோகிராமில் மூன்று நாட்களுக்குள் கலந்து கொள்ள வேண்டும். இதில் நீங்கள் சிங்கப்பூரில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லி கொடுக்கப்படும். அடுத்து, 2 வாரத்திற்குள் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வதும் முக்கியம். அதை தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒருமுறை உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப்படும். அதில் வேறு எதுவும் தொற்று வியாதி ஏற்பட்டு இருந்தால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே அந்த வேலை சரியில்லாத பட்சத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து சிங்கப்பூரில் இருந்து டிக்கெட் போட்டு அனுப்பி விடுவார்கள். வேறு வீட்டில் வேலை கிடைத்தால் கூட நீங்க சிங்கப்பூரில் இருந்து சென்று விட்டு தான் மீண்டும் உள்ளே வர முடியும்.

சம்பளமாக $500ல் இருந்து $1000 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வாய்ப்பு உண்டு. அது உங்களுக்கு கொடுத்திருக்கும் வேலையையும், சேர்ந்திருக்கும் குடும்பத்தினையும் பொருத்தே அமையும். வேலைக்கு வந்த 6 மாதத்திற்குள் உங்களுக்கு MOM தரப்பில் இருந்து இண்டர்வியூ வைக்கப்படும். அதில் உங்களுக்கு எதுவும் பிரச்னை இருந்தால் அவர்களிடம் கூறலாம்.

Related posts