பாரிஸில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்த தம்பதிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பிரீமியம் எக்கானமி பிரிவில் டிக்கெட் புக் செய்திருந்தனர். விமானத்தில் பயணம் செய்யும் பொழுது அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் பயணியுடன் ஒரு நாயும் அமர்ந்திருந்தது. இந்நிலையில் அந்த நாய் அதிகம் கூச்சலிட்டு அவர்களின் நிம்மதியை கெடுத்ததாகவும் மேலும் அவரது கணவரின் காலில் நாயின் எச்சில் வழிந்ததாகவும் அந்த பெண் புகார் அளித்தார்.
விமானம் புறப்பட்டு விட்டதால் பிரீமியம் எக்கானமி பிரிவில் வேறு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கின்றதா என்று ஊழியர்கள் சோதனை செய்தபோது வேற எந்த இருக்கையும் இல்லாததால் அவர்கள் எக்கனாமி பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இதனை அடுத்து, கட்டண வித்தியாச தொகையினை தம்பதிகளுக்கு திருப்பி தருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் 795 அமெரிக்க டாலர் திருப்பித் தரப்படும் என நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
விமானத்தில் உடல் குறைவு உள்ளவர்கள் யாரேனும் பயணித்தால் அவர்களுக்கு உதவியாக நாயை உடன் அழைத்துச் செல்லலாம் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இதற்கு முன் அறிவித்திருந்தது. அதனால் இந்த பிரச்சனையை சட்டரீதியாக அணுக முடியாது என்பதால் இருக்கைக்குரிய தொகையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திருப்பி தருவதாக அறிவித்துள்ளது.