சிங்கப்பூரில் இருந்து Los Angeles விமான நிலையத்திற்கு புறப்பட இருந்த ஒரு பயணியின், ஓரியோ என்ற நாய் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ள தகவல் தற்போது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது வரை அந்த நாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஓரியோவின் உரிமையாளரான Pexiuan Sng, கடைசியாக அவருடைய நாயை இரவு 8:21 மணிக்கு சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் Tag போட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு தனது விமானத்தில் ஏறவிருந்தபோது, இரவு சுமார் 8:45 மணிக்கு அவரது நாய் காணாமல்போன சம்பவம் குறித்து போர்டிங் கேட் குழுவினரால் Sngக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரியோ அதன் உரிமையாளர் Sng கொண்டு செல்லவிருந்த மற்றொரு நாயான Toffeeயுடன் பயணிக்கவிருந்த நிலையில் அது தனது கூண்டை விட்டு வெளியேறியுள்ளது. Sngக்கு தனது இரண்டு நாய்களும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்த பிறகு தான் விமானத்தில் ஏற ஆயத்தமாகியுள்ளார். இருப்பினும், விமானம் ஓடுபாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட நேரத்தில் தான் Baggage விஷயத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி விமானம் மீண்டும் தளத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“விமானம் மீண்டும் பின்னோக்கி வந்த நிலையில் சுமார் ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஓரியோ விமானத்தில் இல்லை என்று என்னிடம் கூற 2 ஊழியர்கள் வந்ததாக” Sng கூறியுள்ளார். அதன் பிறகு Oreoவை தேட தனக்கு சில விமான நிலைய ஊழியர்களுக்கும் அவருக்கு உதவியுள்ளனர். ஆனால் வெகு நேரம் பல இடங்களில் தேடியும் Oreoவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தியாவில் குவியும் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு.. கைகொடுக்கும் சிங்கப்பூரின் DBS வங்கி
சிங்கப்பூர் wildlife உள்ளிட்ட பல முகநூல் பக்கங்களில் Oreoவை கண்டுபிடிக்க கூறி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களும் அந்த நாயை எங்கேனும் கண்டால் அது குறித்து தனக்கு தகவல் அளிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.