தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஆசியா நாடுகளில் பரவலாக தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசி விகிதம் குறைவு நமது சிங்கப்பூரை எந்த வகையில் பாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த கேள்விக்கு பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இந்த பிரச்சனை சிங்கப்பூரை இரண்டு வகையில் பாதிக்கும் என்று தெரிவித்தார்.
முதல் பாதிப்பு
சிங்கப்பூரின் அண்டை நாடுகள் கிருமி பரவலை தடுப்பதற்கு தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில் அது உள்நாட்டு பொருளியலை பாதிக்கும்.
இரண்டாவது பாதிப்பு
எல்லைகளைத் திறப்பதில் தாமதம் ஏற்படும். வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு பயணிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த இரண்டு காரணங்களும் சிங்கப்பூரின் பொருளியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் இருப்பினும் இந்த வட்டாரத்தின் பொருளியல் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்