இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த முடக்க நிலை தற்போது உலக அளவில் தளர்ந்து வருகின்றது. நமது சிங்கப்பூரும் தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் முன்பை போல சகஜமாக சிங்கப்பூர் வந்துசெல்ல தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும், Serology என்ற சோதனை குறித்தும் சில தகவல்களை காணலாம்.
பிற நாடுகளில் தடுப்பூசி போட்டவர்கள் சிங்கப்பூர் வரும்போது அவர்களுக்கு இந்த Serology என்ற டெஸ்ட் எடுக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை Hard Copyயாக கொண்டுவந்தால் உங்களுக்கு இந்த Serology சோதனை நிச்சயம் மேற்கொள்ளப்படும். சோதனை முடிவு சரியாக இருந்தால் உங்கள் தடுப்பூசி Status உங்கள் Trace Together செயலியிலும் அப்டேட் செய்யப்படும்.
ஆனால் அதுவே நீங்கள் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை Digital முறையில் எடுத்துவந்தால், உங்களுக்கு Serology சோதனை மேற்கொள்ளாமலே உங்கள் தரவுகள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டு உங்கள் தடுப்பூசி Status அப்டேட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து நீங்கள் இந்தியா செல்ல என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
சிங்கப்பூரில் இருந்து இந்தியா மட்டுமல்ல சிங்கப்பூரில் இருந்து எந்த ஒரு நாட்டிற்கும் புறப்படும் முன், அந்த நாட்டில் உள்ள பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும். அதன் பிறகு முதலில் Pre Departure Covid-19 சோதனையை மேற்கொள்ளவேண்டும். அதுவும் நீங்கள் விமானத்தில் ஏறவிருக்கும் 72 மணிநேரத்திற்குள் இந்த சோதனையை எடுத்திருக்கவேண்டும்.
Visa, Passport மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அருகில் உள்ள கிளினிக் அல்லது MOH பரிந்துரைக்கும் மையங்களுக்கு சென்றால் உங்களுக்கு Pre Departure சோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
மேலும் இந்தியா புறப்படும் முன் aarogya setu என்ற இந்திய அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சொந்த தகவல்களை பதிவு செய்துகொள்ளவேண்டும்.
Vaccination சான்றிதழ்
சிங்கப்பூரில் நீங்கள் இரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், Trace Together செயலியில் அப்டேட் செய்திருந்தாலும் இந்தியாவிற்கு வரும்போது அதை பயன்படுத்த முடியது. ஏன் என்றால் இந்திய அதிகாரிகள் Trace Together செயலியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் தான் notarise.gov.sg என்ற இணையம் உங்களுக்கு தேவைப்படும்.
இதில் உங்கள் பாஸ்போர்ட் எண் கொண்டு login செய்தால், உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை உங்களால் டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் இந்திய அதிகாரிகள் உங்கள் தடுப்பூசி நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும் முடியும். தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி இந்த விதிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் எந்தவித இடர்பாடும் இல்லாமல் சிங்கப்பூரில் இருந்து சுலபமாக இந்தியா செல்ல முடியும்.