சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களின் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து 4 மணி நேரம் கேளிக்கை நிகழ்ச்சிகள் துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நடத்தப்பட்டன.
Alliance of Guest Workers Outreach என்ற அமைப்பு சிங்கப்பூர் மனிதவள அமைச்சக்கத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தியது.
மனநலம் சிறப்பாக காத்திட சிறப்புரை, இலவச முடு திருத்தம் மற்றும் புகைப்படக் கூடங்கள் ஆகியன இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் விடுதிகளிக் வசிக்கும் ஊழியர்கள் சுமார் 5000 பேருக்கு உணவு பார்சல் வழங்கப்பட்டது.
அன்றை நாளில் இரவு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பாலிவுட் நடன நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.