சிங்கப்பூரில் தனது சொந்த மகன் கடத்தப்பட்டதாக புகார் அளித்த அறுபது வயது மதிக்கத்தக்க தந்தையிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆடவர் பொய்யான தகவலை கூறியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
punggol walk என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது யாரோ சில மர்ம நபர்கள் காரில் வந்து தனது மகனை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக அந்த ஆண்டவர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த ஆடவர் அளித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரில் வந்து கடத்தியதாக சொல்லப்படும் நபர்களும், கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர்களும் ஏற்கனவே அறிமுகம் உள்ளவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காருக்குள் அந்த ஆடவரின் மகன் விருப்பத்துடன் ஏறிச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொய்யான புகார்களை அழித்து காவல்துறையினரை அலைக்கழிக்கும் பட்சத்தில் அந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.