TamilSaaga

“என் மகன் உயிரோடு திரும்ப வேண்டும்; யுவர் ஹானர்” – 11 மணி நேரம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் போராடிய நாகேந்திரன் தாயார் – தூக்கு உறுதி!

சிங்கப்பூர் – மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்தின் தாயார் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 26) தனது மகனின் மரண தண்டனையை ஒத்தி வைக்கும் 11 மணி நேர முயற்சியில் தோல்வியடைந்தார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரணதண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ஒத்திவைத்த நிலையில் அவரது மனுவை கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனால், நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியானது, இந்நிலையில் வரும் ஏப்ரல் 27ம் தேதி புதன் கிழமை நாகேந்திரன் தூக்கிலடப்படுவர் என்ற தகவலை அவரது முன்னாள் வக்கீல் திரு. ரவி தெரிவித்தார் என்று இந்திய ஊடகமான India Today செய்தி வெளியிட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் கடந்த 2010ம் ஆண்டு 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

மேலும் படிக்க – “கல்யாணத்துக்கு வரமுடியாதும்மா” என்று சொல்லிவிட்டு… ஊருக்கு வந்து திடீர் சர்பிரைஸ் கொடுத்த வெளிநாட்டு ஊழியர்.. மகிழ்ச்சி தாங்காமல் ஓடி வந்த கட்டியணைத்த மனைவி

முந்தைய நீதிமன்ற விசாரணையில், அவரது IQ 69-ஆக இருந்தது என்றும், இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டது என்றும் நாகேந்திரன் சார்பாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் சிங்கப்பூரின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களை மீறி அவர், தான் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்தே நாகேந்திரன் செயல்பட்டார் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாகேந்திரன் கே. தர்மலிங்கத்தின் தாயார் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 26) தனது மகனின் மரண தண்டனையை ஒத்திவைக்கக் கோரிய கடைசி விண்ணப்பத்தை நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ் மற்றும் பெலிண்டா ஆங் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அமர்வு தள்ளுபடி செய்தது.

அவரது தாயாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, நாகேந்திரனுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இரு மணிநேரம் செலவிட நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

“எனக்கு என் மகன் உயிருடன் திரும்ப வேண்டும், யுவர் ஹானர்.” என்று நீதிமன்றத்தில் அவரது தாயார் இன்று கோரிக்கை வைத்தார். ஆனால், அனைத்தும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts