TamilSaaga

சிங்கப்பூரில் சுட்டெரிக்கும் வெயில்.. ஆனால் இந்த வெயிலால் ஒரு முட்டையை முழுசா வேகவைக்க முடியுமா? சிங்கையில் நடந்த சுவாரசிய ஆராய்ச்சி

Urban Heat Island Effect என்ற ஒரு நிகழ்வின் காரணமாக, சிங்கப்பூரில் இனி வரும் சில நாட்களில் வெளியில் வானிலை மிகவும் சூடாக இருக்கும், குறிப்பாக வெப்பத்தை உறிஞ்சும் கான்கிரீட் மேற்பரப்புகள் சூரியனுக்கு நேரடியாக வெளிப்படும் திறந்த பகுதிகளில் அதிக வெப்பம் காணப்படும்.

இங்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருந்துவருகின்றது, சில தினங்களுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு 29 டிகிரி வெப்பம் நிலவ, அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 4, 2022 அன்று, மெரினா பேரேஜில் அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வகையான வெப்பம் ஒரு முட்டையை வேகவைக்க போதுமானதா?

சிங்கப்பூரில் இந்த விசித்திர ஆராய்ச்சியும் நடந்துழலடித்து, மேலும் அதற்கான பதிலும் ஒரு Tiktok கணக்கு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று மாலை நடைபெறும் மாபெரும் Toto Draw.. ஜாக்பாட் பரிசு சுமார் S$24,00,000 – அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கப்போகுதோ தெரியல

சிங்கப்பூரில் ஒருவர் வாணலி மற்றும் வெயிலின் வெப்பத்தைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் முட்டையை சமைக்க முயன்றுள்ளார். ஆனால் இவருடைய இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதா என்று கேட்டல் அதற்கு பதில் இல்லை என்பது தான்.

அவர் முட்டையை ஒரு வாணலியில் வைத்து 5 நிமிடம், 30 நிமிடம், 1 மணி நேரம் மற்றும் 2 மணி நேரம் என்று மதிப்பிட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகும் அது half boil ஆனதே அன்றி முழுமையாக வேகவில்லை என்று தான் கூறவேண்டும்.

So.. அவருடைய இந்த முயற்சி தோல்வியானது, சிங்கப்பூரில் வெப்பம் அதிகம் தான் என்றபோது ஒரு முட்டையை முழுமையாக வேகவைக்க இந்த வெயில் பத்தாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts