Construction: பெரும்பாலான தமிழ்நாட்டினை சேர்ந்த இளைஞர்கள் சிங்கப்பூரில் வேலைக்காக காத்திருப்பார்கள். அவர்கள் எந்த துறையில் வேலைக்கு செல்லலாம் என்ற குழப்பம் இருக்கும். அப்படி ஒரு சந்தேகத்தில் நீங்க இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
Construction துறை:
கட்டுமான துறைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு தான் construction துறையில் வொர்க் பெர்மிட் கிடைக்கும். பணி அனுமதியின் காலம் பொதுவாக 2 ஆண்டுகள். தொழிலாளியின் பாஸ்போர்ட், Security bond மற்றும் பணியாளர் வேலைக்கு எடுக்கப்பட்ட காலம் ஆகியவற்றில் எது குறைவானதோ அது செல்லுபடியாகும்.
இதையும் படிக்க: சிங்கப்பூர் செல்ல தயாரா? வெளியாக இருக்கும் புதிய SPass Quotaகள்… சம்பள உயர்வு… MOM சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன?
1 ஏப்ரல் 2022 முதல், வெளிநோயாளிகளுக்கான முதன்மை பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு பணியாளருக்கும் முதன்மை பராமரிப்புத் திட்டத்தை கம்பெனி நிர்வாகம் கொண்டு இருக்க வேண்டும்.
Construction துறையில் இருக்கும் ஊழியர்களுக்கான கட்டுப்பாடு:
- பணி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனியில் மட்டுமே பணிபுரிய வேண்டும்.
- வேறு எந்த தொழிலிலும் பங்கு கொள்ளவோ, சொந்தமாக தொழில் தொடங்கவோ கூடாது.
- வேலையின் தொடக்கத்தில் முதலாளி கொடுத்த முகவரியில் மட்டுமே வசிக்கவும். வேறொரு இடத்திற்குச் செல்லத் திட்டமிட்டால், அவர்கள் தங்கள் முதலாளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
- வெளியிடங்களுக்கு செல்லும் போது வொர்க் பெர்மிட் அட்டையை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லுங்கள். திடீரென பொது அதிகாரியும் கேட்கும்போது அதை சமர்ப்பிக்கவும்.
- MOMமின் அனுமதியின்றி சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவரை திருமணம் செய்யக் கூடாது.
இந்தியாவில் இருந்து ஒருவரை வேலைக்கு எடுக்கும் போது அவர்கள் NTS என அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். மலேசியர்கள் அல்லாத தொழிலாளர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Construction துறையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தகுதிகள்:
Basic-Skilled முடித்தவர்கள் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வேலை செய்ய முடியும். Higher-Skilled (R1) முடித்தவர்கள் 26 ஆண்டுகள் வரை வேலை செய்ய முடியும். NTS ஊழியர்களுக்கு Higher-Skilled முடித்து இருந்தால் லெவி 300 சிங்கப்பூர் டாலராகவும், Basic-Skilled முடித்து இருந்தால் லெவி 700 சிங்கப்பூர் டாலராகவும் இருக்க வேண்டும்.
Construction துறையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வொர்க் பெர்மிட்டினை பெறுவதற்கு முன், கீழிருக்கும் Safety courseல் ஒன்றை முடிக்க வேண்டும்.
*Construction Safety Orientation Course (CSOC)
*Apply Workplace Safety and Health in Construction Sites
உங்கள் IPA பெற்றவுடன், படிப்பிற்கு கம்பெனி பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். சிங்கப்பூர் வந்ததிலிருந்து 2 வாரங்களுக்குள் படிப்பை முடிக்கவும். வந்த 3 மாதங்களுக்குள் படிப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் உங்களின் பணி அனுமதி ரத்து செய்யப்படலாம்.