சிங்கப்பூரில் வேலைக்கு வர முயற்சி செய்து கொண்டிருப்பவரா நீங்க? அப்போ இந்த அப்டேட் நிச்சயம் உங்களுக்கானது தான். Skilled டெஸ்ட் குறித்த நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தில் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் இது.
Skilled டெஸ்ட் குறித்து சமீப நாட்களாக பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சிங்கப்பூரில் தான் இனி skilled டெஸ்ட் நடக்கும் என்ற தகவல் தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நமது தமிழ் சாகா சார்பில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் நமக்கு கிடைத்திருக்கும் எக்ஸ்க்ளூசிவ் தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்களை விழிப்புடன் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறோம்.
அதாவது, தமிழகத்தில் skilled டெஸ்ட் முடித்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி, இன்னமும் சிங்கப்பூர் வராமல் உள்ளனர். சொந்த கதை, சோகக் கதை என்று பலவேறு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்கள் அனைவரும் skilled முடித்து certificate-ம் வாங்கிவிட்டனர். ஆனால், சிங்கப்பூருக்கு வேலைக்கு வரவில்லை.
இதனால், சிங்கை மனிதவளத்துறை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. நிறைய இளைஞர்களுக்கு skilled certificate கொடுத்தும் அவர்கள் சிங்கப்பூர் வராததால், அதற்கான பட்டியலையும் மனிதவளத்துறை தயாரித்துள்ளது. இந்த சூழலில் தான், இனி புதிதாக எவருக்கும் skilled கொடுக்க வேண்டாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று (டிச.11) சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல நிறுவனம் சார்பில் திருச்சியில் பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது. இதில், அந்நிறுவனத்தின் மேலாளர் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்தார். இந்த சூழலில் அவருடன் நாம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் skilled டெஸ்ட் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “Construction துறையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் skilled டெஸ்ட் முடித்து certificate வாங்கியும், சிங்கப்பூருக்கு வேலைக்கு வராமல் உள்ளனர். இதனால், இனி புதிதாக construction துறையில் யாருக்கும் skilled டெஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவில் நடக்கும் Construction skilled டெஸ்ட்டுக்கு சிங்கப்பூரில் இருந்து வரும் examiners-களிடம், இந்தியா செல்லத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே தேவைக்கு போதுமான அளவில் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், அடுத்த சில மாதங்களுக்கு புதிதாக யாரையும் skilled டெஸ்ட் எடுக்க வைத்து காத்திருக்க வைக்க தேவையில்லை என்று சிங்கை அரசு கருதுகிறது. ஏற்கனவே certificate வாங்கியவர்களை வேலைக்கு எடுத்துவிட்டு, அதன் பிறகு பற்றாக்குறை இருந்தால் மட்டும் புதிதாக ஆட்களை எடுக்கலாம் என்று சிங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஒருவேளை இத்துறையில் skilled அடிப்பதாக இருந்தால், ஜனவரி முதல் சிங்கப்பூரிலும் டெஸ்ட் அடிக்க முடியும் என்ற நிலை உருவாகலாம்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், construction துறையில் இனி சில மாதங்களுக்கு புதிதாக skilled டெஸ்ட் அடிக்கும் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் சிங்கை அரசு சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதில், இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால், சிங்கப்பூரில் தான் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்று கூறிவிட்டால், ஒட்டுமொத்தமாக அதன் செலவு 80,000 மட்டுமே ஆகும். அதுமட்டுமின்றி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு நான்கே நாட்களில் certificate வழங்கப்படும். இந்தியாவில் skilled டெஸ்ட்டுக்கு 2.30 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இன்ஸ்டிடியூட்ஸ்கள் பணம் வாங்குகின்றன. கிட்டத்தட்ட 60 நாட்களை வரை இதற்கான பயிற்சிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இப்போதைக்கு construction துறையில் skilled டெஸ்ட் அடிக்க யாரும் பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்னும் ஒரு மாதம் பொறுமையாக காத்திருந்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு நீங்கள் முடிவு செய்தால், உங்கள் பணம் மிச்சமாகும் என்பது உறுதி.