TamilSaaga

சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் வேலை செய்யாததற்கு தந்தை முகத்தை வீங்க வைத்த நபர்.. தாய் நிலைமை இன்னும் மோசம்

சிங்கப்பூர்: கம்ப்யூட்டர் புரோகிராம் வேலை செய்யாததால் கோபமடைந்த ஒருவர், தனது தந்தையின் முகத்தில் அடித்து, அந்த முதியவரை வீட்டை விட்டு வெளியேறச் செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதற்கு அவருக்கு தக்க தண்டனையும் கிடைக்கப் போகிறது.

இப்படியும் சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது ஓர் சம்பவம். சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதான லிம் ஜுன் ஹாங் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு தனது தந்தையின் கம்ப்யூட்டரில் Software ஒன்றை டவுன்லோட் செய்திருக்கிறார்.

சிங்கப்பூரில் கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் : “நீதிமன்றம் செல்லும் நேரத்தில் மர்மமான முறையில் மரணம்” – துப்பறியும் போலீசார்

ஆனால், programme வேலை செய்யாததால், தனது தந்தை அந்த கம்ப்யூட்டரின் administrative access-ஐ தனக்கு கொடுக்கவில்லை என்று நினைத்த லிம் தந்தையின் முகத்தில் இரண்டு முறை பலமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லிம்மின் 64 வயதான தந்தை, இது போன்ற தாக்குதல் மீண்டும் நிகழாமல் இருக்க, அவர்கள் ஒன்றாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதேபோல், லிம் மூன்று முறை கோபத்தில் தனது தாயின் மீது “projectiles”-களையும் வீசியது உறுதி செய்யப்பட்டது.

62 வயதான அவரது தாயார் மீது வீசப்பட்ட பொருட்களில் duct tape holder மற்றும் பிளாஸ்டிக் கால்குலேட்டர் போன்ற எழுதுபொருட்களும் அடங்கும்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு லிம்மின் பெற்றோர் இருவரும் மருத்துவ சிகிச்சை பெறவில்லை.

இதையடுத்து லிம் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) தனது தந்தையை தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றச்சாட்டையும், தனது தாயை காயப்படுத்திய குற்றச்சாட்டையும் லிம் ஒப்புக்கொண்டார்.

“கவலை வேண்டாம்.. ஆனால் கவனம் வேண்டும்” : சிங்கப்பூரில் வலுப்பெறும் Digital Banking – MAS தரும் மகிழ்ச்சியான தகவல்

அதேசமயம், லிம் antisocial personality disorder எனும் ஒருவித கோளாறால் அவதிப்படுவதாக Institute of Mental Health-ன் மனநல மருத்துவர் கண்டறிந்தார். எனினும், லிம் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts