TamilSaaga

சுவா சூ காங்கில் புதிய பலமாடி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி? புக்கிட் பாத்தோக் நிலையம் இடமாற்றம்?

சிங்கப்பூர், மே 7: சுவா சூ காங் (Choa Chu Kang) வட்டாரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் காவல் படை இன்று (மே 5) தெரிவித்துள்ளது. கிராஞ்சி ராணுவ முகாம் மூன்றுக்கு அருகே உள்ள இடத்தில் இதற்கான கட்டடம் கட்ட அனுமதி கிடைத்தால், பலமாடிகளைக் கொண்ட இந்த பயிற்சி நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.

இதுகுறித்து சிங்கப்பூர் காவல் படை வெளியிட்டுள்ள தகவலில், இந்த புதிய பயிற்சி நிலையம் ‘அடுத்த தலைமுறை’ வசதிகளுடன் வடிவமைக்கப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவா சூ காங்கில் இந்த புதிய பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டால், தற்போது புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் இயங்கி வரும் பழைய ஓட்டுநர் பயிற்சி நிலையம் மூடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், புக்கிட் பாத்தோக் பகுதியில் வசிக்கும் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், புதிய நிலையம் சுவா சூ காங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளால்…… 7 இடங்களில் வேலைநிறுத்தம்! MOM தகவல்

வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவது மற்றும் ஓட்டுநர் பயிற்சி நிலையங்களை நிர்வகிப்பது போன்ற முக்கிய பணிகளை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. புதிய பயிற்சி நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டால், போக்குவரத்து காவல்துறையின் மேற்பார்வையில் இது செயல்படும்.

சுவா சூ காங்கில் அமையவுள்ள இந்த பயிற்சி நிலையம், சிங்கப்பூரில் கட்டப்படும் இரண்டாவது பலமாடி வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் என்ற பெருமையைப் பெறும். இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் பகுதியில் இதேபோன்ற பலமாடி வசதியுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இடப்பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பலமாடி பயிற்சி நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பலத்த காத்து, கொளுத்தும் வெயிலா? பணியிடத்துல உங்க ஊழியர்களை எப்படிப் பாதுகாக்கிறது? MOM புதிய வழிமுறைகள்!

புதிய பயிற்சி நிலையம் திறக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன வசதிகளையும், மேம்பட்ட கற்றல் சூழலையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், புக்கிட் பாத்தோக் பயிற்சி நிலையம் மூடப்பட்டால் அங்குள்ள பயிற்றுனர்கள் மற்றும் ஊழியர்கள் புதிய நிலையத்தில் பணியமர்த்தப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையின் மேலதிக தகவல்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts