TamilSaaga

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்த புலம்பெயர் தொழிலாளி.. 14 ஆண்டுகளில் அவர் வாழ்வை புரட்டிப்போட்ட “தமிழ்” – செம்மொழி அனைவரையும் வாழவைக்கும்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி இன்று சரளமாக தமிழ் பேசி பலரை ஆச்சர்யப்படுத்தி வருகின்றார்.

Xie Dong என்ற அந்த புலம்பெயர் தொழிலாளி கடந்த 14 ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் உள்ள பூக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். சீனாவில் இருந்து அவர் இங்கு வந்தபோது அவருக்கு தமிழும், ஆங்கிலமும் ஓரளவுகூட பேசத்தெரியது என்பது தான் Highlight.

Lianhe Zaobao என்ற செய்தி நிறுவனம் அவர்குறித்த ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது, 38 வயதான Xie கிழக்கு சீனாவில் உள்ள Anhui மாகாணத்தைச் சேர்ந்தவர். சிங்கைக்கு முதன் முதலில் வந்தபோது எனக்கு ஆங்கிலத்தில் எண்ணுவது கூட சிரமமான ஒன்றாக இருந்தது என்கிறார் Xie.

ஊழியரை நம்பி Blank Cheque கொடுத்த முதலாளி.. லட்சக்கணக்கில் சுருட்டிய சிங்கப்பூர் பெண் – மே 19 முதல் துவங்கும் சிறைவாசம்!

ஆரம்பத்தில் தமிழ் கற்பது சிரமமாக இருந்ததால், அனைவரிடமும் சைகை பாஷயில் தான் அவர் பேசி வந்துள்ளார். இருப்பினும் Xieன் முதலாளி தமிழர் என்பதால் பொறுமையாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசக் கற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த கடைக்கு அதிகபட்சமாக வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அவர் இன்னும் விரைவில் தமிழ் கற்றுக்கொண்டார். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் தமிழ் மட்டுமல்லாமல், சிறிதளவு ஆங்கிலம், மலாய் மற்றும் Thai ஆகிய மொழிகளை பேசுகின்றார்.

சிங்கப்பூரில் அமலாகும் தளர்வுகள்.. குறைக்கப்படும் SDA அதிகாரிகள்.. இனி அவர்களின் நிலை என்ன? கைகொடுத்த சிங்கை அரசு!

இந்திய கலாச்சாரங்களை கற்றுக்கொண்ட அவர், தற்போது பூ மாலைகளை கட்டுவதிலும் கைதேர்ந்தவராக மாறியுள்ளார். பொதுவாக பிற இனத்தவர்களிடம் பொருட்களை வாங்க தயங்கும் வெகு சில வாடிக்கையாளர்கள் கூட இவர் பேசும் தமிழில் மயங்கி இவரிடம் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கு சென்றாலும் தமிழ் ஒருவரை வாழவைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக வாழ்கின்றார் இந்த தமிழ் பேசும் சீன சிங்கம்.

News Source : Mothership

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts