TamilSaaga

சிக்கனே தான் வேண்டுமா? வேறு “அசைவம்” சாப்பிடுங்க.. இதுவரை சிங்கப்பூரில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை – நேற்று ஒரே நாளில் மாறிய “வரலாறு”

இந்த உலகில் மனிதர்கள் வாழ நீர், நெருப்பு, காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு முக்கியத்துவமான இடத்தை சிக்கனுக்கு கொடுக்கலாம். ஆம்! சிக்கனின்றி அமையாது இந்த உலகு. அந்த அளவுக்கு மக்கள் சிக்கன் உணவுடன் தங்கள் வாழ்க்கையை தொடர்புப்படுத்துகின்றனர்.

உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டுக்கோழியில் (Red Jungle Fowl) இருந்துதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 18 வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. “ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை” எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.

இப்படியாக தன்னகத்தே ஒரு History-யை கொண்டுள்ள சிக்கன் சிங்கப்பூரின் மிக மிக முக்கிய உணவாகும். உலகின் அனைத்து வகை சிக்கன் அயிட்டங்களை நமது சிங்கையில் கிடைக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘சில்லி சிக்கன் சிங்கப்பூர்’ என்றால் அதை ருசிக்க ஒரு கியூவே நிற்கும். இப்படியாக சிங்கப்பூர் மக்களின் உணவில் தவிர்க்க முடியாத உணவு இந்த கோழிக்கறி.

மேலும் படிக்க – ஒரே இரவில் சிங்கப்பூரின் அடிமடியிலேயே கைவைத்த மலேசியா.. எதிர்பார்க்காத சிங்கை அரசு – மிகப்பெரும் அளவில் அடிவாங்கும் ‘சிக்கன்’ பிஸ்னஸ்

ஆனால், இதில் சிக்கல் என்னவெனில், சிங்கப்பூரில் சமைக்கப்படும் பெரும்பாலான கோழிகள் வெளியில் இருந்து இறக்குமதி தான் செய்யப்படுகின்றன.

சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து சுமார் 35 சதவீத கோழி இறைச்சியையும் 93 சதவீத வாத்துகளையும் இறக்குமதி செய்கிறது. அதேபோல் பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்தும் கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. முட்டைகளுக்கு, 76 சதவீத சப்ளை மலேசியாவில் இருந்து வருகிறது.

இந்தியாவில் இருந்து சிக்கன் இறக்குமதி இல்லையா? என்று கேட்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி, UAE (62.5%) ஓமன், மாலத்தீவு மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு தான் அதிகளவில் சிக்கன் ஏற்றுமதி செய்து வருகிறது. சீனா தான் ஆசியாவிலேயே அதிகளவு சிக்கன் ஏற்றுமதி செய்யும் நாடு. தாய்லாந்து அடுத்த இடத்தில் உள்ளது.

சரி.. விஷயத்துக்கு வருவோம். இந்த சூழலில் தான் மலேசியா தங்கள் நாட்டில் நிலவும் கோழி தட்டுப்பாடு காரணமாக சிங்கப்பூருக்கான ஏற்றுமதியை ஜூன் மாதத்திற்கு தடை செய்துள்ளது. இதனால், சிங்கையில் கடும் கோழி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க – சாங்கி விமான நிலையம்.. அதிக அளவிலான பயணிகளை கையாள நாங்க ரெடி – விரைவில் படிப்படியாக திறக்கவிருக்கும் Terminal 2!

இந்நிலையில், Singapore Food Agency (SFA) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் சிக்கனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், வேறு அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தனை ஆண்டு காலத்தில், சிங்கப்பூரில் இதுபோன்று சிக்கனுக்கு பதில் வேறு உணவுகளை சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு அரசு அறிவுறுத்தியதாக தெரியவில்லை என்கின்றனர் சில மூத்த சிங்கப்பூரர்கள்.

அதுமட்டுமின்றி, மக்கள் தங்களுக்கு தேவையான அளவு மட்டுமே சிக்கன் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என ரவுண்டு கட்டி அடிக்கும் சிக்கனை ‘பார்த்து.. கொஞ்சமா யூஸ் பண்ணுங்க’ என்று அரசு சொல்வதும் இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும் என்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts