TamilSaaga

“மறுசுழற்சி செய்தால் பணம்” : புதிய பசுமை திட்டத்திற்காக சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் முன்னெடுப்பு

சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியால் (PAP) நிர்வகிக்கப்படும் நகரங்களில் வசிப்பவர்கள், மறுசுழற்சிக்கான திட்டம் மற்றும் அவர்களது நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள காகித மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் “Zero Waste” (பூஜ்ஜிய கழிவு) வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சி நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 4) அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் விதியை மீறி “Car Pooling” சேவை

பசுமை நகரங்களுக்கான அதன் நடவடிக்கை (AGT – Action for green towns) முன்முயற்சியின் கீழ், SGRecycle உடன் இணைந்து, மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 78 காகித மறுசுழற்சி இயந்திரங்களை அதன் 15 நகரங்களில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் பொருட்களை டெபாசிட் செய்வதற்கு முன், பதிவு செய்ய முதலில் கணினியில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட 1 கிலோ காகிதம் அல்லது அட்டைக்கு 6 சென்ட் கிடைக்கும். இது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன் அவர்களின் டிஜிட்டல் வாலட்களில் சேமிக்கப்படும் என்பது நினைவுகூரத்தக்கது. கோவிட்-19 நிலைமை நாட்டில் மேம்படும் போது, ​​குடியிருப்பாளர்களிடையே இந்த இயந்திரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த “அவுட்ரீச் திட்டங்கள்” நடத்தப்படும் என்று PAP தனது செய்திக்குறிப்பில் மேலும் கூறியது.

அனைத்து PAP நகர சபைகளும் காகித பயன்பாட்டைக் குறைப்பதாக உறுதியளித்துள்ளன. உதாரணமாக, முடிந்தவரை காசோலைகளை வழங்குவதற்கு பதிலாக ஒப்பந்ததாரர்களுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல். பசுமை நகரங்களுக்கான அதன் நடவடிக்கையை முதலில் வெளியிட்ட சில மாதங்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமையன்று கட்சியால் அறிவிக்கப்பட்ட பல முயற்சிகளில் இவையும் அடங்கும்.

மே மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, 2025ம் ஆண்டிற்குள் PAP-யால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு நகரத்தையும் “பூஜ்ஜிய கழிவு, ஆற்றல் திறன் மற்றும் பசுமையானதாக” மாற்றுவதற்கு பல்வேறு பங்குதாரர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts