சிங்கப்பூரில் “Dee Kosh” என அழைக்கப்படும் யூடியூபர் டேரில் இயன் கோஷி (வயது 32) இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன் வணிக ரீதியான பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்ள இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். கோஷி மீது திரைப்படச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் நபர்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டேரில் இயன் கோஷி பகடி செய்யும் மியூசிக் வீடியோக்களால் தனக்கென தனி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய அறிக்கையில், கோசியின் நிர்வாகத்திடமிருந்து “எங்களுடன் எந்த தொழில்முறை சேவை ஈடுபாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையைப் பெற்றதாக NOC கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருக்கு NOC-உடன் நிலுவையில் உள்ள அல்லது தொடரும் திட்டங்கள் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்றும் NOC தெரிவித்துள்ளது. NOC என்பது Night Owl Cinematics என்ற youtube சேனல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கோஷி முன்பு பணியாற்றிய பல நிறுவனங்களான ஹவாய், ஃபுட்பாண்டா மற்றும் லெனோவா உட்பட, அவருடனான அவர்களின் தொடர்புகள் முடிந்துவிட்டன என்றும், தற்போதைய அல்லது எதிர்கால திட்டங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.