சிங்கப்பூரில் இன்று வியாழன் (ஜனவரி 13) காலை 7.30 மணியளவில் Bartley சாலையில் உள்ள மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கார் எறியதுவங்கிய சில மணிநொடிகளில் அதை உணர்ந்த அந்த காருக்குள் இருந்த ஓட்டுநர் மற்றும் அந்த ஓட்டுநரின் மகன் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. திருமதி க்யூக் என்று அறியப்பட அந்த கார் ஓட்டுநர், சம்பவம் நடந்தபோது தனது Primary ஒன்று படிக்கும் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவர் கூறினார்.
“பள்ளிக்குள் செல்வதற்காக நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தோம், அப்போது தான் நாங்கள் ஏதோ எரியும் வாசனையை உணர்ந்தோம், எங்களது கார் எரிவதை உணர்ந்த என் மகன் என்னை விரைவாக காரில் இருந்து வெளியேறச் சொன்னான்.” உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறிய தாயும் மகனும் பள்ளியின் உதவியை நாடினர். மேலும் அவசர எண் 995க்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்குள் அவர்களுடைய கார் பற்றியெரிய துவங்கியது.
சில நிமிடங்களுக்குப் பிறகு தீயை அணைக்கும் கருவியுடன் பள்ளிக்கு வெளியே வந்த பாதுகாவலர் ஒருவர் தீயை அணைக்க முயன்றார் ஆனால் அது பலனளிக்கவில்லை. எரியும் வாகனத்திலிருந்து சில நிமிடங்களுக்கு ஒருமுறை சில வெடிக்கும் சத்தம் கேட்டது என்றும். அதிலிருந்து கரும் புகை எழுந்து பள்ளிக்குள் புகுந்ததுஎன்றும் கூறப்பட்டது.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள் தீயை அணைத்தனர். அந்த சிறுவனின் விரைவான செயலால் இருவரும் காயங்களின்றி தப்ப்பினர்.