சிங்கப்பூரில் கன்னிங்ஹில் பியர்ஸ் தான் நமது சிங்கப்பூர் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மிக உயரமான கட்டிடமாக மாற உள்ளது. வரும் 2025-ல் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டிடம் – கேபிட்டலேண்ட் மற்றும் சிட்டி டெவலப்மென்ட்ஸ் (CDL) இடையேயான கூட்டு வளர்ச்சி – முதல் இரண்டு மாடிகளில் மோக்ஸி ஹோட்டல், சோமர்செட் சர்வீஸ்டு அபார்ட்மெண்ட்கள் மற்றும் சில்லறை விற்பனை இடம் ஆகியவை அடங்கும்.
கேனிங்ஹில் பியர்ஸ் குடியிருப்பு 24வது மாடியில் ஸ்கை பிரிட்ஜ் மூலம் இணைக்கப்பட்ட இரண்டு பிளாக்குகளில் 696 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அறை அலகுகளுக்கான விலை 1.16 மில்லியனில் தொடங்கும் என்றும், நான்கு படுக்கைகள் கொண்ட இடத்திற்கு 5.22 மில்லியன் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு பிளாக்குகளின் உயரம் 48 மாடிகளைக் கொண்டிருக்கும் மற்றும் 180 மீ உயரம் கொண்டதாக இருக்கும் – இது ஆற்றங்கரையில் உள்ள மிக உயரமான கட்டிடமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 50 மில்லியன் விலையில் ஒரு சூப்பர் பென்ட்ஹவுஸால் முதலிடம் பெறப்படும். தற்போது சிங்கப்பூரின் மிக உயரமான கட்டிடம் 284 மீ உயரத்தில் உள்ள தஞ்சோங் பகரில் உள்ள குவோகோ டவர் ஆகும்.
CanningHill Piers-ல் உள்ள மொத்த யூனிட்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு – அல்லது 531 இடங்களில் ஒன்று அல்லது இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாக இருக்கும் என்று CDL-ன் செயல் துணைத் தலைவரும் சொத்து மேம்பாட்டுத் தலைவருமான Ms Lee Mei Ling கூறுகிறார். “சர்வதேச பயணிகளுக்கு சிங்கப்பூர் தற்போது ஒரு சிறப்புமிக்க இடமாக உள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் திறக்கப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று திருமதி லீ கூறினார்.