சிங்கப்பூரில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) வழங்கும் மாணவர் அனுமதி (Student’s Pass) கட்டாயமாகும். இது முழுநேர கல்வித் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்குகிறது மற்றும் வேலை உள்ளிட்ட சில நிபந்தனைகளை உள்ளடக்கியது.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) வழங்கிய மாணவர் அனுமதி (Student’s Pass) வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிமுறைகளைப் பற்றி விரிவாக அறியலாம்:
விடுமுறை காலத்தில் வேலை செய்ய அனுமதி:
பின்வரும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் மாணவர்கள், விடுமுறை காலத்தில் வேலை அனுமதி இல்லாமல் பணிபுரியலாம்:
-
கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றில் முழுநேர மாணவராக (matriculated or registered) பயில்பவர்.
-
ICA வழங்கிய மாணவர் அனுமதியை வைத்திருப்பவர்.
-
14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்.
இத்தகைய மாணவர்கள் வேலை தொடங்குவதற்கு முன் எந்த அறிவிப்பும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
The list of institutions is as follows:
- Anglo-Chinese School (International) Singapore
- Australian International School
- Canadian International School
- Chatsworth International School
- Digipen
- Duke-NUS Graduate Medical School
- Dulwich College (Singapore)
- EHL Campus (Singapore)
- ESSEC Business School (Singapore)
- German European School Singapore
- German Institute of Science and Technology – TUM Asia
- Government Junior Colleges
- Government secondary schools
- Government-aided Junior Colleges
- Government-aided secondary schools
- Hwa Chong International School
- Hollandse School
- Independent schools
- INSEAD, Singapore
- Institute of Technical Education, Singapore
- International Community School
- ISS International School
- The Japanese School Singapore
- LaSalle College of the Arts
- Lycee Francais De Singapour
- Millenia Institute
- Mountbatten Vocational School
- Nanyang Academy of Fine Arts
- Nanyang Polytechnic
- Nanyang Technological University
- National University of Singapore
- Nexus International School (Singapore)
- Ngee Ann Polytechnic
- Overseas Family School
- Republic Polytechnic
- S P Jain School of Global Management Singapore
- Saint Joseph’s Institution International School
- Sekolah Indonesia
- Special Education schools
- Specialised Independent schools
- Specialised schools
- Singapore American School
- Singapore Institute of Technology
- Singapore Korean International School
- Singapore Management University
- Singapore Polytechnic
- Singapore University of Social Sciences
- Singapore University of Technology and Design
- Sorbonne-Assas International Law School – Asia
- Stamford American International School
- Swiss School in Singapore
- Tanglin Trust School
- Temasek Polytechnic
- University of the Arts Singapore
- United World College of South East Asia
- Waseda Shibuya Senior High School in Singapore
- XCL World Academy
- Yale-NUS College of the National University of Singapore
Result-காக காத்திருக்கும் மாணவர்கள்:
மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் பயின்று, இறுதித் தேர்வு முடிவுகள் அல்லது பட்டமளிப்பு விழாவுக்காக காத்திருக்கும் மாணவர்கள், அந்தக் காலம் விடுமுறையில், வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்யலாம்.
ஆனால், படிப்பு முடிந்து மாணவர் அனுமதி காலாவதியான பிறகு, சிங்கப்பூரில் வேலை செய்ய வேலை அனுமதி பெற வேண்டும். இதற்கு முதலாளி விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி காலத்தில் வேலை செய்ய அனுமதி:
பள்ளி காலத்தில் வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்ய, பின்வரும் நிபந்தனைகளை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
-
கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றில் முழுநேர மாணவராக இருப்பவர்.
-
ICA வழங்கிய மாணவர் அனுமதியை வைத்திருப்பவர்.
மேலும், வேலை பின்வரும் தேவைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
-
வாரத்திற்கு அதிகபட்சம் 16 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.
-
உங்கள் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் நடத்தும் தொழில்துறை இணைப்பு திட்டத்தின் கீழ் (industrial attachment) வேலை செய்ய வேண்டும். இந்த இணைப்பு கட்டாயமாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம், ஆனால் அது உங்கள் பட்டப்படிப்பு தேவைகளுக்கு பங்களிக்க வேண்டும்.
இதற்கும் முன் அறிவிப்பு தேவையில்லை. ஆனால், பள்ளி காலத்தில் விடுப்பு எடுத்து, பட்டப்படிப்புக்கு பங்களிக்காத கூடுதல் தொழில்துறை இணைப்புகளில் பங்கேற்க விரும்பினால், வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
List of institutions
The list of institutions is as follows:
- Digipen
- Duke-NUS Graduate Medical School
- EHL Campus (Singapore)
- ESSEC Business School (Singapore)
- German Institute of Science and Technology – TUM Asia
- INSEAD, Singapore
- Institute of Technical Education, Singapore
- LaSalle College of the Arts
- Mountbatten Vocational School
- Nanyang Academy of Fine Arts
- Nanyang Polytechnic
- Nanyang Technological University
- National University of Singapore
- Ngee Ann Polytechnic
- Republic Polytechnic
- S P Jain School of Global Management Singapore
- Special Education schools
- Specialised schools
- Singapore Institute of Technology
- Singapore Management University
- Singapore Polytechnic
- Singapore University of Social Sciences
- Singapore University of Technology and Design
- Sorbonne-Assas International Law School – Asia
- Temasek Polytechnic
- University of the Arts Singapore
- Yale-NUS College of the National University of Singapore
வேலை செய்ய அனுமதியில்லாதவர்கள்:
சிங்கப்பூரில் பரிமாற்ற மாணவர்களாக (exchange students) பயிலும் மாணவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பயிற்சி இணைப்பு திட்டத்தில் வரும் மாணவர்கள். பயிற்சி இணைப்பு திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு மாணவர்கள், பயிற்சி வேலை அனுமதி (Training Work Permit), பயிற்சி வேலைவாய்ப்பு அனுமதி (Training Employment Pass) அல்லது வேலை விடுமுறை திட்டத்தில் (Work Holiday Programme) இருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்வது சட்டவிரோதமாகும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.mom.gov.sg/passes-and-permits/work-pass-exemption-for-foreign-students