TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பேருந்து, இரயில் கட்டணம் – PTC அறிக்கை

சிங்கப்பூரில் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள், இயக்கச் செலவுகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாத இறுதியில் அதிகரிக்கப்படும் என பொதுப் போக்குவரத்துக் கழகம் (PTC) நேற்று புதன்கிழமை (நவம்பர் 3) அறிவித்தது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை இயக்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆபரேட்டர்களுக்கு உதவ, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கட்டணச் சரிசெய்தல் அளவு 2.2 சதவீதத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக PTC தெரிவித்துள்ளது.

டிசம்பர் 26 முதல், கார்டு மூலம் பணம் செலுத்தும் வயது வரம்பு எட்டிய பயணிகளுக்கான கட்டணம் 14.2 கிமீ வரையிலான பயணங்களுக்கு 3 சென்ட்களும், 14.2 கிமீக்கு மேல் பயணம் செய்ய 4 காசுகளும் அதிகரிக்கும்.

அதாவது, செங்காங் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையங்களுக்கு இடையே சுமார் 14.2 கிமீ தூரம் பயணிக்க, பயண அட்டைகளைப் பயன்படுத்தும் வயது வரம்பை எட்டிய பயணிகளுக்கு S$1.67 செலவாகும், இது தற்போது S$1.64 ஆக உள்ளது.

இதற்கிடையில், கிழக்கு-மேற்கு கோட்டில் பூன் லேயில் இருந்து பாசிர் ரிஸ் வரையிலான பயணம் தற்போது S$2.13லிருந்து S$2.17 ஆக உயரும்.

மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற சலுகைக் குழுக்களுக்கான கட்டணம் ஒரு பயணத்திற்கு 1 சதவீதம் அதிகரிக்கும்.

மாதாந்திர சலுகை, பயண அனுமதிச் சீட்டுகள் மற்றும் பேருந்துகளுக்கு பணம் செலுத்துபவர்கள் அல்லது ரயில்களில் ஒற்றை பயண டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று மேலும் கூறியுள்ளது.

Related posts