ஆஸ்கர் சாக்சல்பி லீ (Oscar Saxelby-Lee) என்ற பிரிட்டீஷ் குழந்தை தீவிரமான லிம்போப்ளாஸ்டிக் லுக்குமியா (lymphoblastic leukaemia) நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தது.
UK-யில் அனைத்து விதமான சிகிச்சை தரப்பட்ட பின்பும் கூட அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. பிறகு 5 வயதில் அந்த குழந்தை கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மருத்துவமனையில் (NUH) சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனை சிகிச்சைகள் செய்யப்பட்டு இறுதியாக அந்த குழந்தையின் புற்றுநோய் குணப்படுத்தப்பட்டது. பிறகு அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது. தற்போது ஆஸ்கருக்கு வயது 7. சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அந்த நோயால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு குழந்தை லுக்குமியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை UK-வில் எடுக்கப்பட்டது. Intense chemotherapy, Radiotherapy மற்றும் Stem cell transplant சிகிச்சை என அனைத்தும் செய்தும் பலனளிக்கவில்லை.
இறுதியாக சிங்கப்பூரின் Experimental Treatment முறையை கேள்விப்பட்டு அங்கு சென்று NUH-ல் சேர்த்தோம்.
அந்த தருணங்களில் ஆஸ்கர் 10 மாதம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தான். உடல் எடை குறைந்து நடக்க முடியாமல் மிகவும் சிரமத்தை சந்தித்தான். இவ்வளவு சிரமங்களையும் கடந்து சிகிச்சை முடிந்த பிறகு குணமடைந்து வீடு திரும்பியது குழந்தை என பெற்றோர் மிகவும் நெகிழ்வாக கூறியுள்ளனர்.
குழந்தை நலன் குறித்து CNA செய்தி நிறுவனம் பெற்றோரிடம் பேசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.