சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) மற்றும் அதன் மூலம் நியமிக்கப்பட்ட ஆபரேட்டர்கள் நிர்வகிக்கும் உயிர் மீன் கடைகள் மற்றும் உணவுக் கடைகள் அனைத்தும் இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முடிவானது ஜுராங் மீன்வள துறைமுக சந்தைகளில் மீன் விற்க வந்த மீன் பிடிப்பவர்களிடையே கொரோனா தொற்று சமபவம் காணப்பட்டதால் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கடைக்காரர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பி பரிசோதனைக்கு அழைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு பரிசோதனை நடத்தி நெகடிவ் என்ற முடிவு வரும் வரையிலும் அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தொற்றுக்களை உடனடியாக கண்டறிய துறைமுகங்களில் கொரோனா சுய பரிசோதனை கருவியும் அளிக்கப்படும் முன்பே அமைச்சகம் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. மேலும் சிங்கப்பூரின் Both Hong Lim மார்க்கெட் வரும் ஜூலை மாதம் 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.