சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 25) காலை Mairna Bay பகுதியை ஒட்டிய பகுதியில் ஒரு ஆணின் சடலம் மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), கலை அறிவியல் அருங்காட்சியகம் அமைந்துள்ள 6 பேஃபிரண்ட் அவென்யூவிலிருந்து காலை 8.50 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாகக் கூறியது. தகவல் கிடைத்து SCDF அந்த பகுதிக்கு சென்றபோது ஒரு உடல் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு உடலை நீரின் மேற்பரப்பில் இருந்து மீட்டனர்.
இதையும் படியுங்கள் : “எனக்கு அவன் சந்தோஷமா இருந்தா போதும்”
மீட்கப்பட்ட அந்த மனிதர் இறந்துவிட்டார் என்று SCDF அறிவித்தது, ஏசியாஒனின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் போலீஸ் படை, 68 வயது முதியவரின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த இறப்பு சம்பவத்தில் எந்தவித முறைகேடும் இல்லை என்றும் இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு முகநூல் பதிவில் வெளியான ஒரு (Challenge) சவாலில் “சீன வழக்கப்படி பேய் மாதம் என்று அழைக்கப்படும் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு சிங்கப்பூர் ஆற்றின் குறுக்கே நீந்திய 45 வயது ஆடவர் கடலில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் அடுத்த நாள் SCDFன் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவால் (DART) கண்டுபிடிக்கப்பட்டது.