TamilSaaga

இது வரலாற்றில் முதல் முறை : நீளமான அஞ்சல் தலைகளை வெளியிட்ட சிங்கப்பூர் போஸ்ட்

சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனம் சிங்கப்பூர் நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் நீளமான அஞ்சல் தலைகளை இன்று வெளியிட்டுள்ளது. வானுயரவுள்ள பசுமை தோட்டங்களை கொண்ட சிங்கப்பூரின் முக்கிய கட்டிடங்களின் படங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அஞ்சல் தலையும் சுமார் 81.6 மில்லி மீட்டர் உயரத்தில் இருக்கும். சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள அரசாங்கம் மற்றும் தனியார் சொத்து பயன்பாட்டாளர்களின் திட்டங்களை கொண்டாடும் வகையிலேயே இந்த அஞ்சல் தலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த அஞ்சல் தலைகளில் இடம்பெற்றுள்ள கட்டிடங்களின் விவரங்கள் பின்வருமாறு

(Khoo Teck Puat) கஹு தெக் புஅட் மருத்துவமனை
Oasia Hotel Downtown
(Kampung Admiralty) கம்புங் அட்மிரல்ட்டி
ஜுவல் சாங்கி விமான நிலையம்
Sky Terrace
(Lee Kong Chian) லீ கொங் சியென் Lee Kong – இயற்கை வரலாற்று அரும்பொருளகம்

மேற்குறிப்பிட்ட இந்த கட்டடங்களின் படங்கள் அஞ்சல் தலைகளில் இடம்பெற்றுள்ளன. அஞ்சல் நிலையங்களிலும் இணைவாயிலாகவும் இந்த புதிய அஞ்சல் தலைகள் தற்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts