TamilSaaga

“இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர்கள்”.. இவ்வாண்டு சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் – அவர்கள் செய்த சாதனை என்ன?

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த திரு. ப்ரீவீன் சூரஜ் சாந்தகுமார், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் முண்டதை கண்டும், அங்கிருக்கும் ​​அகதிகளின் அவல நிலையைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து உடனடியாக போலாந்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் போரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக வரும் மக்களுக்கு உணவளிக்கும் உன்னத செயலில் இன்றளவும் ஈடுபட்டு வருகின்றார். உண்மையில் போர் முண்ட இடத்தில் சேவை செய்ய செல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, நிச்சயம் அதற்கென்று ஒரு தனி மன தைரியம் வேண்டும்.

போலந்து நாட்டிற்கு சென்ற சாந்தகுமார் அங்கு கடந்த 25 ஆண்டுகளாக தங்கியிருக்கும் திரு. சரண்ஜித் சிங் வாலியாவை சந்தித்தார். அவருடன் இணைந்து தான் போலந்து எல்லையில் உள்ள உக்ரேனிய அகதிகளுக்கு உணவு வழங்க அவர் உதவி வருகின்றார்.

ஆறு அதிர்ஷ்ட எண்களும் நச்சுனு பொருந்தியிருக்கு.. அடித்தது S$11,49,738 ஜாக்பாட் – சிங்கப்பூர் TOTO Draw மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரரான “மச்சக்காரன்”

இந்நிலையில் இவ்வாண்டு வழங்கப்படவிற்கும் “ST சிறந்த சிங்கப்பூரர்கள்” விருதுக்கு இவர்கள் இருவரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வு, தற்போது எட்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றது. சமூகத்தில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக சிங்கப்பூரர்களுக்கு அல்லது ஒரு குழுவை சார்ந்தவர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த விருது.

கடந்த ஆண்டுக்கான இந்த விருதை திரு. சக்திபாலன் பாலதண்டாவுதம் என்ற தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஆன்லைனில் விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை கண்டு தனது கல்லீரலின் ஒரு பகுதியை ஒரு வயது குழந்தைக்கு தானமாக கொடுத்துள்ளார்.

News and Image Source : straits times

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts