சிங்கப்பூரில் “My Brother SG” நிறுவனத்தின் தன்னார்வலர் ஒருவர் சிங்கப்பூரின் ACE நிறுவனத்துடன் இணைந்து இங்குள்ள பங்காளதேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது உள்ளூர் சமையலை செய்து கொடுத்து வருகின்றார்.
அக்தர் என்ற அந்த தன்னார்வலர் கடந்த 6 வாரங்களாக சிங்கப்பூரில் உள்ள பங்களாதேசிய புலம்பெயர்ந்த தொழிலாளாளர்களுக்கு அவர்களுடைய உள்ளூர் உணவுகளை அவர்களுக்கு செய்துகொடுத்து அந்த தொழிலாளர்கள் வயிற்றை மட்டுமல்லாமல் மனத்தினையும் குளிரச்செய்து வருகின்றார். அந்த ஊழியர்களும் மனமகிழ்ச்சியோடு அந்த உணவை உட்கொள்கின்றனர்.
50 வயதாகும் அக்தர், ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு அந்த தொழிலாளர்களுக்கு இந்த சேவையை செய்து வருகின்றார். தற்போது அக்தரின் இந்த செயல் மேலும் பல தன்னார்வலர்களை ஈர்த்துள்ளது. இதுவரை 1000க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அவர்கள் உணவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரை நம்பி இங்கு உழைக்க வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மன நெகிழ்ச்சியையும், சிறந்த உற்சாகத்தையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.