ராக்கெட்டை விட அதிக வேகத்தில் வளரும் இந்த விஞ்ஞானம் பல விதங்களில் நன்மைகளை அளித்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் அந்த டெக்னாலஜி தற்போது சிங்கப்பூரில் ஒரு உயிரையே கைப்பற்றியுள்ளது. 24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரின் ஸ்மார்ட் வாட்ச், அவர் விபத்தில் சிக்கிய பின்னர் உதவிக்கு அழைத்தது அவரை காப்பாற்றியுள்ளது. முகமது ஃபிட்ரி என்ற அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஆங் மோ கியோவில் வேன் மீது மோதியதில் பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு ஆங் மோ கியோ அவென்யூ 6 மற்றும் ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 31 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் Hit and Run என போலீசார் உறுதி செய்தனர். ஃபிட்ரியின் குடும்பம் தற்போது இந்த விபத்து குறித்து மேலதிக தகவல்களையும் சாட்சிகளையும் தேடி வருகின்றனர்.
ஃபிட்ரி அளித்த தகவலின்படி, அவரது இந்த விபத்தை கண்டறிந்த அவருடைய ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் உடனடியாக தனது காதலிக்கும் ஆம்புலன்சுக்கும் உடனடியாக தகவல் அளித்துள்ளது. ஆப்பிள் வாட்ச்களின் சில வகை போன்களில் இந்த சேவை இருப்பது குறிப்பிடத்தக்கது.