TamilSaaga

சிங்கப்பூரில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்று.. சிங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பாதிப்பு – MOH அளித்த முழு விவரம்

நேற்று புதன்கிழமை (ஜூலை 13) அன்று சிங்கப்பூர் தனது இரண்டாவது உள்ளூர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்துள்ளது. சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, சிங்கப்பூரில் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்ந்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், MOH கூறியதாவது : “அந்த நோயாளி சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயதான பிரிட்டிஷ் நாட்டவர் என்றும், அவர் நேற்று புதன்கிழமை குரங்கமைக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும் தெரிவித்தது.

அவர் தற்போது சிங்கப்பூரின் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு கடந்த ஜூலை 6ம் தேதி Perianal பகுதியில் அதாவது ஆசனவாயைச் சுற்றியுள்ள பகுதியில் சொறி போன்ற அமைப்பு ஏற்பட்டது மற்றும் திங்கள்கிழமை (ஜூலை 11) அன்று அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது.

சிங்கப்பூர் வர காத்திருக்கும் ராஜபக்ச? மாலத்தீவு மக்களுக்கு இலங்கை மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன? – இணையத்தில் வைரலாகும் தகவல்கள்

உடனடியாக அவர் புதன்கிழமை மருத்துவ சிகிச்சை பெற்று NCIDயில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தில் தொடர்புத் தடமறிதல் நடந்து வருவதாக MOH தெரிவித்துள்ளது. இறுதியாக இங்கு முன்னர் பதிவாகிய குரங்கம்மை வழக்குடன் இவர் தொடர்புடையவர் அல்ல என்றும் MOH தெரிவித்தது.

சிங்கப்பூரில் பதிவான நான்காவது வழக்கு, கடந்த ஜூலை 8ம் தேதி பதிவாகிய வெளிநாட்டில் இருந்து வந்த தொற்று, 30 வயதான இந்திய நாட்டவர் தான் அவர். சிங்கப்பூரில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஜெர்மனியில் இருந்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts