சிங்கப்பூரில் ஆங் மோ கியோ அவென்யூ 3 வழியாக சென்றபோது பேருந்தின் பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கி 46 வயது பெண் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று மரணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை 6.45 மணியளவில் ஒரு பாதசாரி விபத்துக்குள்ளானதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
56 வயதான அந்த பஸ் டிரைவர் “கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக” கைது செய்யப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள் அந்த பேருந்தின் பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கிய இருந்த அந்த பெண்மணியை ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியேற்றினர்.
கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸின் மூத்த துணைத் தலைவர் டாமி டான் இதுகுறித்து பேசியபோது : “இது நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், எங்கள் வருத்தத்தையும் உதவிகளையும் வழங்க அந்த பெண்மணியின் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்த வருகின்றது. மேலும் அந்த பேருந்து ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.