அமெரிக்காவின் Bloomberg செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போது அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளின் “அபாய அளவை” அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) சிங்கப்பூரின் அபாய அளவை “Moderate” என்பதிலிருந்து “High” என்று உயர்த்தியது, மேலும் தடுப்பூசி போடாத பயணிகள் சிங்கப்பூருக்கு “அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவின் CDC, பிற நாடுகளை நான்கு பெருந்தொற்று ஆபத்து நிலைகளாக வகைப்படுத்துகிறது.
சிங்கப்பூர், முன்பு நிலை 2ல் வைக்கப்பட்டிருந்தது. இது சிங்கப்பூரில் நாட்டில் பெருந்தொற்றின் “மிதமான நிலை”-யைக் குறிக்கிறது. ஆனால் அமெரிக்கா இப்போது சிங்கப்பூரின் அபாய அளவை ஒரு உச்சத்தில் உயர்த்தியுள்ளது. அதை 3 வது இடத்தில் வைத்து, சிங்கப்பூரில் தொற்றின் “உயர் நிலை” இருப்பதாக எச்சரிக்கிறது.
சிங்கப்பூர் செல்வதற்கு முன் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று CDC அறிவுறுத்துகிறது. “சிங்கப்பூரில் தற்போதைய நிலைமை காரணமாக, சிங்கப்பூர் பயணிக்கும் பயணிகளுக்கு பெருந்தொற்று பரவும் ஆபத்தும் இருக்கலாம்” என்று CDC மேலும் கூறியது. சிங்கப்பூர் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட தினசரி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஹாங்காங் நாட்டையும் Moderate என்ற அளவில் இருந்து High என்ற அளவுக்கு தற்போது உயர்த்தியுள்ளது அமெரிக்க அரசு. இருப்பினும் சிங்கப்பூரில் நோய் பரவல் அதிகரிப்பதால் இங்கு வர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் ஹாங்காங் நகரில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து 10க்கும் குறைவான தினசரி வழக்குகளே பதிவாகி வருகின்றன. மேலும் டெல்டா மாறுபாட்டின் வெடிப்பை இன்னும் ஹாங்காங் அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பித்தக்கது இதனால் அமெரிக்காவின் இந்த முடிவு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.