சிங்கப்பூர் விமானத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் அலப்பறை ஏகப்பட்ட அலப்பறைகளை தாண்டி நிலைக்கு சென்றுள்ளது. வித்தியாசமாக சேட்டை செய்து மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் புதிய வரவாக ஒரு ஆசாமி இணைந்து இருக்கிறார்.
துருக்கியில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு துருக்கி ஏர்லைன்ஸ் ஒன்று பயணம் செய்து கொண்டு இருந்தது. அதில் மொத்தமாக 318 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரை சேர்ந்த 30 வயதான நபர் இஸ்தான்புல்லில் இருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்தார். அவர் நன்கு குடித்து விட்டு போதையில் அருகில் இருந்த பயணிகளிடம் தகராறு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் மணிமகுடத்தில் இன்னுமோர் சிறகு… Disney சொகுசுக்கப்பல்…. இனிமே விசிட் அடிக்க செம ஸ்பாட் உங்களுக்கு ரெடி!
விமான பணிப்பெண்ணினை அழைத்த பயணிகள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். ஏர் ஹோஸ்டஸ் கேட்ட போது அவர்களிடமும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே விமானத்தினை அவசரமாக சென்னையில் தரையிறக்க சென்னை விமான கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது. அவர்களும் பிரச்னையின் தீவிரத்தினை அறிந்த பின்னர், விமானம் தரையிறங்கியது.
சென்னையிலேயே அந்த போதை ஆசாமியை இறக்கி விட்ட விமானம் மற்ற பயணிகளை அழைத்து கொண்டு சிங்கப்பூர் கிளம்பி சென்றது. அந்த நபருக்கு போதை தெளிந்த பின்னர் பின்னால் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த பிரச்னையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.