TamilSaaga
airshow

சிங்கப்பூர் மக்களின் விருந்தளிக்க காத்திருக்கும் ஒன்பதாவது விமான கண்காட்சி… இந்த ஆண்டு எதிர்பார்க்கும் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பூர் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விமான கண்காட்சி ஆனது பிப்ரவரி 20 முதல் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி ஆனது மக்களின் பார்வைக்காக நடத்தப்படும்.

2018 ஆம் ஆண்டில் 70 ஆயிரம் பேர் கண்காட்சியை கண்டு களித்தனர். அதற்குப் பிறகு கொரோனா நோய் தொற்றின் காரணமாக காட்சியை பார்க்க வந்தோரின் எண்ணிக்கையானது 20000 ஆக குறைந்தது.அதற்கு அடுத்தபடியாக 2022 ஆம் ஆண்டில் கண்காட்சி நடத்தப்பட்ட பொழுதும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.இந்நிலையில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கண்காட்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நோய் தொற்றின் வீரியமானது முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளதால் இந்த ஆண்டு அதிகப்படியான மக்கள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .விமான கண்காட்சி காண சீட்டானது ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்ள பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டின் விலை 34 டாலர் எனவும், 3 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ஆனது 17 டாலராக இருக்கும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மேலும் நான்கு பேர் மற்றும் வாகனத்திற்கான பார்க்கிங் சார்ஜ் அனைத்தும் சேர்த்து 234 டாலர் என குரூப் டிக்கெட்டும் வழங்கப்படுகின்றது.

Related posts