TamilSaaga

Exclusive : “சிங்கப்பூர் – இந்தியா” : ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – தொற்றிலும் தொடர்ந்த சேவை

கோடி கண்டுபிடிப்புகள் கண்டுவிட்டோம் என்று மனிதம் ஆர்ப்பரிக்கும் காலமிது, செவ்வாயில் என்ன உள்ளது என்பதை கண்டறிய பறக்கிறது ஆயிரம் ராக்கெட்டுகள். ஆனால் ஒரே ஒரு தொற்று தோன்றியது, நிசப்தமானது உலகம். சுமார் 2 ஆண்டுகளாக முடக்க நிலையில் தான் நகர்கிறது அனைவரது வாழ்க்கை. எத்தனை லட்சம் உயிர்களை, திரும்பிய பக்கமெங்கும் மரணஓலங்கள். ஆனால் அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு, உயிரை பணையம் வைத்து சேவை செய்யத்தொடங்கினர் பலர். உருவானது தடுப்பு மருந்து, தொடர்ந்து காக்கப்படுகிறது கோடிக்கணக்கான உயிர்கள். உண்மையில் இந்த இக்கட்டு சூழலில் நமக்காக போராடிய நெஞ்சங்கள் பல.

இதையும் படியுங்கள் : என்றுமே ராஜா நீ ரஜினி

அதில் சில தான் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி விமான நிலையம். இந்த தொற்று காலத்திற்கு முன்பு பெரிய அளவில் புகழ்பெறவில்லை, மக்களிடையே வரவேற்பை பெறவில்லை என்றபோது. இந்த தொற்று தொடங்கிய காலத்தில் பாரெங்கும் உள்ள எனது இந்திய மற்றும் தமிழ் மக்களை காக்க எங்களால் முடியும் என்று துணிந்து இறங்கியது ஒரு கூட்டம். “எல்லாம் உங்க லாபத்திற்கு தானே” என்று சிலர் கூறினாலும் பலரும் அஞ்சி நடுங்கிய வேளைகளில் முன்களப்பணியாளர்களாக செயல்பட்டு மக்களை நாடுதிரும்ப உதவினார்.

குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் நமது சிங்கப்பூரில் இருந்து பல லட்சம் மக்களை நாடு திரும்ப உதவியதில் இந்த இரண்டு விமான சேவை நிறுவனத்தின் பங்கு என்பது அதிகம். 2020 மார்ச் மாதம் முதல் பல்லாயிரம் விமானங்களை இன்றளவும் இயக்கி வருகின்றது ஏர் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ். குறிப்பாக வந்தே பாரத் சேவைப்பற்றி நம்மால் நிச்சயம் மறக்கமுடியாது.

சிங்கப்பூர் தனது VTL சேவைகளை தொடங்கியதும் இப்போது பல விமான சேவை நிறுவங்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய அளவில் திருச்சி விமான நிலையம்தான் அதிக அளவிலான விமானங்களை சிங்கப்பூர் மற்றும் திருச்சி இடையே இந்த தொற்று காலத்தில் இயக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts