TamilSaaga

சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் திடீரென்று தீப்பிடித்த விமானம்… சாங்கி விமான நிலையத்தில் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்ட பயணிகள்!

சைனாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஏர் சைனா விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்ததில் சிங்கப்பூரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சீனாவின் செங்டு எனப்படும் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் புறப்பட்ட விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் தீப்பிடித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

உடனே பிற்பகல் சுமார் 4 மணி அளவில் சிங்கப்பூரின் மூன்றாவது ஓடுபாதையில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனை ஒட்டி விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் சாங்கி விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்களுக்கு தாமதம் ஆக்கப்பட்டது. இதனால் சாங்கி விமான நிலையம் சில மணி நேரங்களுக்கு பரபரப்புடன் காணப்பட்டது.

Related posts