சிங்கப்பூரின் சாங்கி மச்சி விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு செல்லும் ஹேண்ட் லக்கேஜ்களை பரிசோதிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியானது தற்போது மூன்றாவது டெர்மினலில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இந்த சோதனையானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் பயணிகளின் நேரம் ஆனது 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயணிகள் எப்பொழுதும் அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது விமான நிலையத்தில் விதிமுறையாகும். அதில் சிகரெட், பவர் பேங்க், கத்தி, பூச்சிக்கொல்லி மருந்துகள்,தீப்பெட்டி போன்றவை அடங்கும். இவற்றையெல்லாம் கண்டறிய தற்போது எக்ஸ்ரே இயந்திரத்தை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அதற்கு பதிலாக தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்பொழுது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது .
இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது பயணிகளின் நேரம் மட்டும் அல்லாமல் மனித தவறுகளும் கட்டுப்படுத்தப்பட்டு துல்லியமாக கண்டறிய படலாம் என எதிர்பார்ப்படுகின்றது. மனிதர்கள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளும் காலத்தை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக இத்தொழில்நுட்பம் வேலை செய்யும். இந்த நடைமுறையானது ஏற்கனவே அமெரிக்கா, சீனா போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூரில் நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது கொரோனா நோய் தொற்றுக்கு பின்பு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த நடைமுறை பயன்படுத்தும் பொழுது நேரம் விரயமாவதை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.