சிங்கப்பூரில் டெலிகிராம் குழு மூலம் ஆபாசப் விஷயங்களை வைத்திருந்தமை மற்றும் பகிர்ந்ததற்காக நான்கு பேர் மீது இன்று புதன்கிழமை (ஜூலை 28) நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டுள்ள்ளது. “Sam’s lots of CB collection” என்று அழைக்கப்படும் இந்த குழுவில் பாலியல் வீடியோக்கள், பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பெண்களின் ஆபாச விடியோக்கள் இருந்துள்ளன, மேலும் இந்த ஆபாச விஷயங்கள் பல இடங்களுக்கு பரப்பப்பட்டுள்ளன.
ஆபாசமான தரவுகளை வைத்திருந்த மற்றும் பரப்பியதற்காக 28 வயதான வோங் மிங் ஜுனு மீது 11 குற்றச்சத்துக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் 40 வயதான டான் யியோ சோங் மீதும் இதேபோன்ற ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மலேசியவாசியும், சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை பெற்றவருமான 46 வயது மதிக்கத்தக்க யீ விங் கே மெது 10 குற்றச்சாட்டுகளையும், 30 வயதான லிங்கன் அந்தோனி பெர்னாண்டஸுக்கு ஆறு குற்றச்சாட்டுகளும் வழங்கப்பட்டன.
ஆபாசமான திரைப்படங்களை வைத்திருப்பதற்காக அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம்.