சிங்கப்பூரில் சட்டவிரோத நிதி தொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் நாணய வாரிய அமைப்பின் தலைமையின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுவதில் இதற்காகவும் ஒரு குழு இடம்பெறுகிறது.
கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுதல், பயங்கரவாதிகளுக்கு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தல் போன்ற நிதி சார்ந்த குற்றங்களை அமைப்பு கண்டறிந்து அதில் சிக்குபவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும்.
மேலும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் மோசடியில் சிக்காமல் இருப்பதையும் இந்த குழு கண்காணிக்கும்.
இது போன்ற முக்கிய ஆபத்துகளுக்கு எதிராக இந்த புதிய குழுவை அமைப்பது பற்றி ஆலோசனை நடப்பதாக பணிக்குழு தெரிவித்துள்ளது.