TamilSaaga

சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவில் உயரும் வேலைவாய்ப்பு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவருக்கு எந்தெந்த துறையில் வாய்ப்பு? – “Job Vacancies List வெளியிட்ட MOM”

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த டிசம்பரில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 1,14,000 என்ற சாதனை அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 53,000 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, வணிகங்கள் புத்துயிர் பெற துவங்கியுள்ளன.

“சிங்கப்பூரில் மோசடிகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்”.. சென்ற ஆண்டு நிலவரம் என்ன? : அமைச்சர் விளக்கம் – ஊழியர்களே உஷார்!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி நேற்று மனிதவள அமைச்சகத்தின் (MOM) தரவுகளின்படி, குறைந்தது ஆறு மாதங்களாக நிரப்பப்படாத காலியிடங்களின் விகிதம் கடந்த 2020ம் ஆண்டு 27 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது அது 35 சதவீதமாக வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல இதற்கு முன், 2014ம் ஆண்டிலிருந்து இந்த விகிதம் ஒரு பரந்த சரிவில் இருந்தது என்றும் அமைச்சகம் அதன் வேலை காலியிடங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது, தொழிலாளர் பற்றாக்குறை வரவிருக்கும் மாதங்களில் குறையும் என்று கூறினார். முதலில் எல்லைகள் திறக்கப்பட்டு, PMET அல்லாத வேலைகளில் அதிக வெளிநாட்டு தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்றும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

PMET, NON PMET வேலை என்றால் என்ன?

Professionals, Managers, Executives and Technicians இந்த தொழில் சார்ந்த தொழிலாளர்களை தான் PMET தொழிலாளர்கள் என்று அழைக்கின்றார்கள். அதே Cleaner, Security Guardகள், Construction தொழிலாளர்கள், Driverகள் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் NON – PMET தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் Target என்னவாக இருக்கவேண்டும்?

சிங்கப்பூரில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, PMET மற்றும் NON – PMET என்று இரண்டு விதங்களிலும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

“பெண்கள்ன்னா சும்மா இல்ல.. வாலை சுருட்டி வைக்கலனா பெண்டு கழட்டிடுவோம்” – சிங்கப்பூர் கணவர்களுக்கு அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை

ஆகவே வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வர விரும்புபவர்கள் PMET துறைகளில் மென்பொருள், Web மற்றும் Multimedia Developer ஆகிய துறைகளில் வேலைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. அதுபோல கட்டுமான துறையில் வேலை செய்ய உதவியாளர்கள், கடைகளில் Sales Assistant மற்றும் Cleaner போன்ற NONPMET பணிகளில் வெளிநாட்டவர்கள் சேர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கு உள்ளிட்டவருக்கும் இருக்கும் வேலைவாய்ப்பு vacancy குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை சிங்கப்பூர் MOM வெளியிட்டுள்ளது. அதை காண இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்யலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts