TamilSaaga

“சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா” : உரிமம் பெறாத மசாஜ் நிலையங்கள் – அமலாக்க நடவடிக்கையில் 9 பெண்கள் கைது

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் மசாஜ் பார்லர்களில் பணியாற்றிய ஒன்பது பெண்கள் கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17க்கு இடையில் மூன்று நிறுவனங்களில் போலீஸ் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் ஸ்தாபன சட்டத்தை மீறி, இந்த மூன்று நிலையங்களும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதாக போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

22 மற்றும் 47 வயதிற்குட்பட்ட ஒன்பது மசாஜ் செய்யும் பெண்களும், பெண்கள் சாசனத்தின் கீழ் செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அவர்கள் என்ன குற்றங்களை செய்தார்கள் என்பது குறித்து குறிப்பிடவில்லை, ஆனால் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளனர்.

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மசாஜ் தொழிலை நடத்துவது குறித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts