TamilSaaga

“குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஆதரவு” : 5 ஆண்டுகளில் 9 பில்லியன் செலவழிக்க திட்டம் – சிங்கப்பூர் பட்ஜெட் 2022

சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை மேம்படுத்தவும் ஆதரவளிக்கவும் ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் டாலர்களை அரசாங்கம் செலவிடும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் 2022 வெளியீட்டு விழாவில் பேசிய திரு வோங், விரிவாக்கப்பட்ட வேலைக்கான வருமானம் கூடுதல் திட்டம் அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் “காதல்” எனும் பெயரில் நடக்கும் “காமக்களியாட்டம்”.. இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள்

இந்தத் திட்டம் 20 சதவிகிதத்திற்கும் கீழ் வருமானம் உள்ள சிங்கப்பூர் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இது மத்திய வருங்கால வைப்புநிதி டாப்-அப்கள் மற்றும் தொழிலாளியின் வருமானத்திற்கு துணைபுரிய பணமாக என்று இரண்டு வடிவங்களிலும் செலுத்தப்படுகிறது.

மேலும் அடுத்த ஆண்டு முதல், திட்டத்தின் தகுதி வருமான வரம்பு மாதத்திற்கு S$2,300லிருந்து S$2,500 ஆக உயர்த்தப்படும். 30 முதல் 34 வயதுடைய இளைய தொழிலாளர்களுக்கும் இது நீட்டிக்கப்படும், அவர்கள் அதிகபட்சமாக S$2,100 வருடாந்திர ஊதியத்தைப் பெறுவார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் முன்னதாகவே வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியத்திற்காக சேமிப்பை தொடங்க வழிவகுக்கும் என்று திரு வோங் கூறினார்.

சிங்கப்பூர் பட்ஜெட் 2022: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “ஆஹா” அறிவிப்பு

35 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் வருடத்திற்கு அதிகபட்சமாக S$3,000ஐப் பெறுவார்கள், அதே சமயம் 45 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் வருடத்திற்கு S$3,600 அதிகபட்ச வருடாந்திர கொடுப்பனவைப் பெறுவார்கள். 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், ஆண்டுதோறும் அதிகபட்சமாக S$4,200 Payout தொகையைப் பெறுவார்கள்.

இந்த அதிகபட்ச பேஅவுட் என்பது அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் நீட்டிக்கப்படும் என்பது தான் பட்ஜெட்ன் சிறப்பு.

“இரண்டு கட்டங்களாக 2023 மற்றும் 2024ம் ஆண்டில் GST உயரும்” : சில அசத்தல் சலுகைகளும் அறிவிப்பு – சிங்கப்பூர் பட்ஜெட் 2022

பகுதி நேர பணியாளர்கள் மற்றும் சாதாரண பணியாளர்கள் வழக்கமான, முழுநேர வேலையில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக மாதத்திற்கு S$500 என்ற குறைந்தபட்ச வருமான அளவுகோல் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு வோங் கூறினார். முன்னதாக அறிவித்தபடி, வரும் ஆண்டுகளில் சில்லறை விற்பனை, உணவு சேவைகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கும் முற்போக்கு ஊதிய மாதிரி விரிவுபடுத்தப்படும், என்றார் வோங்.

வணிகங்கள், நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோர் ஆகிய அவர்கள் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். மற்றும் எங்கள் குறைந்த ஊதிய தொழிலாளர்களை மேம்படுத்த பங்களிக்க வேண்டும்” என்று திரு வோங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts